பிளாஸ்டிக் கம்பெனி இயந்திரத்தில் சிக்கி 3 வயது சிறுவனின் கை துண்டானது : உரிமையாளர் மீது வழக்கு

0
37

பிளாஸ்டிக் கம்பெனி இயந்திரத்தில் சிக்கி 3 வயது சிறுவனின் கை துண்டானது : உரிமையாளர் மீது வழக்கு

நாகர்கோவில், செப். 21-அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாஹுல் ஹுசைன். இவர் தற்போது தனது மனைவி மற்றும் மூன்று வயதுமகனுடன் நாகர்கோவில் கோட்டாறு மறவன் குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ளார். சரக்கல் விளையில் உள்ளபிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன் வேலைக்கு செல்லும்போதுதனது மூன்று வயது மகனையும் அழைத்து சென்றுள்ளார். மெஷின் ஆபரேட்டராக உள்ள பாஹூல் ஹுசைன்வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அவரது மகன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்குள்ள இயந்திரத்தில் சிறுவன் கையை நுழைத்துள்ளான்.

இதில் சிறுவனின் வலது கை துண்டானது. குழந்தை அலறும் சத்தம் கேட்டு வந்தவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் கோட்டாறு போலீசார் விசாரணை நடத்தினர். பாதுகாப்பற்ற முறையில் மனித உயிருக்குதீங்கு விளைவிக்க கூடும் என்று தெரிந்தும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக அந்த நிறுவன உரிமையாளர்சுப்புராஜ் (65) மீது வழக்கப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here