‘மீசைய முறுக்கு 2’ படத்தில் கானா கலைஞர்களின் உலகம்: ஹிப் ஹாப் ஆதி தகவல்

0
19

ஹிப் ஹாப் ஆதி, இயக்கி, நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில், சைத்ரா ஆச்சர், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஹர்ஷத்கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இப்படம் செப்.25-ல் வெளியாகிறது.

இப்படம் பற்றி ஹிப் ஹாப் தமிழா ஆதி கூறும்போது, “மீசைய முறுக்கு என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக். ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது.

இப்படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் கானா கலைஞர்களின் உலகமும் அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகத்தை இப்படம் பதிவு செய்கிறது.

குறிப்பாக, கானா கலைஞர்கள் தங்களது போராட்டங்கள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் பயணங்களைப் பாடல்களாக வெளிப்படுத்தி, தங்களது கலையின் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்களது கதைகளும், அவர்கள் வாழும் உலகமும் இந்தப் படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கிறது. அவர்களது குரலையும் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இந்தப் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here