தெலங்​கானா: சாலை தடுப்பில் கார் மோதி நரம்பியல் நிபுணர் உயிரிழப்பு

0
19

தெலங்​கானா மாநிலம் கம்​மம் நகரைச் சேர்ந்த நரம்​பியல் அறு​வைச் சிகிச்சை நிபுணர் டாக்​டர் ஜெகதீஷ் பாபு, நேற்று காலை ஹைதராபாத்துக்​குத் தனி​யாக காரில் சென்று கொண்​டிருந்​தார்.

அவர் பயணம் செய்த கார், காலை சுமார் 7.15 மணி​யள​வில் சூரியாபேட்டை மாவட்​டம் பிள்​ளலமர்ரி அருகே உள்ள தேசிய நெடுஞ்​சாலை​யில் சென்​று​கொண்​டிருந்​தது. அப்​போது, திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யின் நடு​விலிருந்த தடுப்​பில் மோதி​யது. அடுத்த சில நிமிடங்​களில் காரில் தீப்பற்றி கொழுந்​து​விட்டு எரிந்​தது. இதனால் ஓட்​டுநர் இருக்​கை​யில் இருந்த ஜெகதீஷ் பாபு​வால் காரிலிருந்து வெளி​யேற முடிய​வில்​லை.

தகவல் அறிந்து தீயணைப்​புப் படை​யினர் மற்​றும் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு வந்து தீயை அணைத்​தனர். ஆனாலும், கார் முற்​றி​லும் எரிந்து நாச​மானது. ஓட்​டுநர் இருக்​கை​யில் இருந்து கருகிய நிலை​யில் ஜெகதீஷ் பாபு உடல் மீட்​கப்​பட்​டது.

போதிய தூக்கமின்மை காரணமாக ஜெகதீஷ் பாபு வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், கார் தீப்பிடித்ததற்கான துல்லிய மான காரணம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசா ரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here