எஸ்பி மாற்றம் உற்சாகத்தில்‎ கனிமவள மாபியா கும்பல்..!!?

0
24

குமரி வழியாக கேரளாவிற்கு கனிம வள லாரிகள் படை எடுக்குது. எஸ்பி ஸ்டாலின் மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குமரி வழியாக கேரளாவுக்கு ரகசியமாக கனிம வளங்கள் செல்கிறதாம்.

இரவு சோதனை சாவடி வழியாக டாரஸ் லாரிகள் சென்று வருகின்றன. சில சோதனை சாவடிகளில் போலீசார் அந்த டாரஸ் லாரிகளை மடக்கி பிடித்துள்ளனர். எஸ்பி இடமாற்றம் கனிமவள மாபியா கும்பலுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள தாகவும் தகவல்கள் கூறுகிறது.

சித்திரம் கோடு பகுதியில் இரவு நேர கனிம வள பயணம் தொடங்கி யாச்சாம். உள்ளூர் சாலையில் 12 வீல் டாரஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனால் அந்த லாரிகளும் அதிக அளவில் செல்கிறது. இப்போது இதற்கு அனுமதி வழங்கியாச்சா? அனுமதி வழங்கியது யார்? இரவு நேரங்களில் கனிம வள லாரிகள் ஓடுவதை இந்த மாவட்ட நிர்வாகம் தடை செய்யுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது..!!!

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here