கடைசி டி20-ல் இன்று மோதல்: களமிறங்குகிறார் சூர்யவன்ஷி

0
27

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் தலா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டி 20 தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது.

தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் பிரதான வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும். இந்த வகையில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். இது நிகழ்ந்தால் இஷான் கிஷன் வெளியே அமரவைக்கப்படக்கூடும். மேலும் சஞ்சு சாம்சன் 3-வது வீரராக களமிறங்கக்கூடும்.

இதேபோன்று பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here