ரியோவின் ‘மேடி’ படப்பிடிப்பு நிறைவு

0
25

ரியோவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில், ரியோ – சானியா ஐயப்பன் நடித்துள்ள படம் ‘மேடி’. இவர்களுடன் சிங்கம் புலி, ஆர்.ஜே.விஜய், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி ஒரேகட்டமாக நடந்து வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து ரோல் டைம் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘பெரிய ஆளுமைகள் ஒன்றிணைந்தை இந்தப் பயணம் பெரும் நம்பிக்கையுடன் தொடங்கியது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த பயணம் அதைவிடப் பெரிய நினைவுகளுடன் நிறைவுறுகிறது. அவ்வளவே. அனைத்தும் இனிதே நிறைவுற்றது’ என்று தெரிவித்து, படப்பிடிப்பு நிறைவு குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த கலையரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு பிரதீப் போத்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக, விளையாட்டு மைதானத்தின் பின்னணியில், பார்வையாளர்கள் இருக்கை இரண்டில் சச்சின், அஞ்சலி என்ற பெயர்கள் தாங்கிய இரண்டு ஜெர்ஸி இருப்பது போல போஸ்டர் ஒன்றை, படப்பிடிப்பு தொடக்கத்தின் போது படக்குழு வெளியிட்டு இருந்தது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here