அமானுஷ்ய க்ரைம் த்ரில்லராக உரு​வாகும் ‘மண்டவெட்டி’

0
29

சரண்​ராஜ் செந்​தில்​கு​மார் இயக்​கத்​தில் உரு​வாகும் திரைப்​படம், ‘மண்டவெட்டி’. டஸ்​கர்ஸ் டென் பிக்​சர்ஸ் சார்​பில் அவரே தயாரித்துள்ள இப்​படம், உளவியல் ரீதி​யான பதற்​றம், நாட்​டுப்​புற நம்பிக்கைகள் மற்​றும் மனித உணர்​வு​களை ஒருங்​கிணைக்​கும் இருண்ட அமானுஷ்ய க்ரைம் த்ரில்​ல​ராக உரு​வாகி​யுள்​ளது.

செஞ்சி எனப்​படும் சக்​தி​வாய்ந்த உள்​ளூர் தெய்​வத்​தைச் சுற்றியுள்ள மர்​ம​மான தொன்​மக் கதைகளை அடிப்​படை​யாகக் கொண்​டு, ஆழமான அச்​சத்​தை​யும் உணர்​வுப்​பூர்​வ​மான தாக்கத்தை​யும் ஏற்​படுத்​தும் வகை​யில் இப்​படத்​தின் கதை நகர்கிறது. பிர​காஷ் மனிதன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்துக்கு தீபக் வேணுகோ​பால் இசையமைத்​துள்​ளார். இப்படத்தின் கதா​நாயகி​யாக கோமலி பிர​சாத் நடித்​துள்​ளார். இப்படத்​தின் டீஸர் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here