மண்டாடி’யை பாராட்டிய ரஜினி – “விலைமதிப்பற்ற தருணம்” என சூரி நெகிழ்ச்சி

0
21

‘மண்டாடி’ படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவான ‘மண்டாடி’ படம் கடந்த செப்.10 அன்று வெளியானது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

தொடர் பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாக சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் ‘மண்டாடி’ படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். அவருடைய இந்த அன்பான அழைப்பு எனக்கும் எங்கள் முழு படக்குழுவுக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாகும். அவரது குரலைக் கேட்ட அந்த விலைமதிப்பற்ற தருணத்தை இந்த புகைப்படம் பதிவு செய்துள்ளது. அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” என்று தெரிவித்துள்ளார். 

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்துக்குப் பிறகு கதாநாயகனாக உருவெடுத்துள்ள சூரியின் திரைப்பயணத்தில் ‘மண்டாடி’ மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here