திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி காணிக்கை

0
28

திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்​டியல் காணிக்கை வந்​துள்​ளது. இது ஒரு சாதனை​யாக கருதப்​படு​கிறது.

ஆந்​தி​ரா​விலுள்ள திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் பக்தர்களின் கூட்​டம் அலைமோதுகிறது. தற்​போது வார இறுதி நாட்​கள் மற்​றும் தொடர் விடு​முறை வரு​வ​தால் பக்​தர்​கள் திருமலை​யில் குவிந்த வண்​ணம் உள்​ளனர். கடந்த 9-ம் தேதி புதன்​கிழமையன்று ஏழு​மலை​யானை மொத்​தம் 69,771 பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். இதில் 25,888 பேர் தலை​முடி காணிக்கை செலுத்​தினர். 4.42 லட்​சம் லட்டு பிர​சாதங்​கள் விற்​பனை​யாகி உள்ளன.

2.65 லட்​சம் பேருக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே சமயத்​தில் புதன்​கிழமை மட்​டுமே கோயில் உண்​டியலில் ரூ.6.94 கோடி காணிக்கை செலுத்​தப்​பட்​டுள்​ளது. இது​தான் திருப்​பதி ஏழுமலை​யான் கோயில் வரலாற்​றிலேயே அதி​கபட்ச ஒரு நாள் உண்டியல் காணிக்கை என்று கருதப்​படு​கிறது.

இது​வரை 3 முறை மட்​டுமே ரூ.6 கோடி அளவுக்கு உண்​டியல் காணிக்கை கிடைத்துள்​ளது. இதில் கடந்த 9-ம் தேதி மட்​டும் கிட்​டத்​தட்ட ரூ.7 கோடி எனும் அளவில் ரூ.6.94 கோடி உண்​டியல் காணிக்கை கிடைத்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here