போதைப் பொருளற்ற பாரதத்தை உருவாக்குவதே என் கனவு: பிரதமர் மோடி

0
15

போதைப் பொருளற்ற பாரதத்தை உரு​வாக்​கு​வதே எனது கனவு என ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி நெகிழ்ச்​சி​யுடன் தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் நரேந்​திர மோடி தனது 137-வது மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்​சி​யில், தொழில்​நுட்​பம், சமூக நடவடிக்கை, தொழில்​முனைவு மற்​றும் மக்​கள் பங்​கேற்பு மூலம் நாட்​டின் அடித்​தட்டு அளவில் மாற்​றங்​களை உரு​வாக்கி வரும் மனிதர்​களை​யும் அவர்​களின் முயற்​சிகளை​யும் பாராட்​டிப் பேசினார்.

மும்​பையைச் சேர்ந்த கிருஷ்ணா சேஷாத்ரி என்​பவர் இந்​திய வரலாற்றை எளி​தில் புரிந்​து​கொள்​ளும் வகை​யில் டிஜிட்​டல் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி மேற்​கொண்டு வரும் ஒரு புதுமை​யான முயற்​சியை மேற்​கோள்​காட்​டிப் பிரதமர் தனது மனதின் குரல் உரையைத் தொடங்​கி​னார்.

பிரதமர் மோடி உரை​யின் முக்​கிய அம்​சங்​கள்: “வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்​குப் போதைப்​பொருளற்ற இளைஞர்​கள்” என்ற இயக்கம் நாடு முழு​வதும் விரை​வாக வேகமெடுத்து வரு​கிறது. இதன் நோக்​கம் மிக​வும் தெளி​வானது. போதைப்​பொருளற்ற இளைஞர்​கள், போதைப்​பொருளற்ற இந்​தி​யாவை உரு​வாக்​கு​வது​தான் அது. போதைப்​பழக்​கம் ஒரு நபரை மட்​டும் சீரழிப்​ப​தில்​லை; அதன் விளைவு​களை முழு குடும்​பம் மட்​டுமின்றி சமு​தாய​மும் அனுபவிக்​கிறது. போதைக்கு எதி​ராக விழிப்​புணர்வு ஏற்​படுத்​துபவர்​களை​யும், மீண்டு வர உதவுபவர்​களை​யும் மனதா​ரப் பாராட்​டு​கிறேன்.

தேசபக்தி மாதம்

ஆகஸ்ட் மாதத்​தில் ஹர் கர் திரங்​கா, தேசிய கைத்​தறி தினம், வெள்​ளை​யனே வெளி​யேறு இயக்க நினைவு தினம், பிரி​வினை கொடுமை​கள் நினைவு தினம், சுதந்​திர தினம் மற்​றும் தேசிய விண்​வெளி தினம் எனத் தேசபக்​தி​யின் பல்​வேறு வண்ணங்களைக் காண முடி​யும். ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்​றப்​பட்டு 150 ஆண்​டு​கள் நிறைவடைவது இந்த ஆண்டை மேலும் சிறப்​புமிக்​க​தாக்​கு​கிறது.

மலர் சாகுபடி

நாகாலாந்​தின் ஃபெக் மாவட்​டத்​தைச் சேர்ந்த வைஷாலு புரோஜி என்ற பெண், கால் ஏக்​கர் நிலத்​தில் அறி​வியல் பூர்​வ​மாக 5,000-க்கும் மேற்​பட்ட கிளாடியோலஸ் மலர்​களைச் சாகுபடி செய்து சாதனை படைத்​திருக்​கிறார். மேலும், இந்​தி​யா​வில் அவகேடா பழச்​சாகுபடி அதி​கரித்து வரு​வதும் பாராட்​டுக்​குரியது. ஒடி​சாவில் காடு​களின் பாது​காப்​பில் பெண்​கள் கணிச​மான பங்​களிப்பை வழங்கி வரு​கின்​றனர்.

மிஷன் சக்​தி​சாட்

இன்று நமது மகள்​களின் கனவு​கள் பூமியி​லிருந்து விண்​வெளி வரை பயணிக்​கின்​றன. ‘மிஷன் சக்​தி​சாட்’ என்ற முயற்​சி​யின் மூலம் 108 நாடு​களைச் சேர்ந்த 12,000 மாணவி மாணவர்​கள் செயற்​கைக்​கோள் தொழில்​நுட்​பத்​தைக் கற்​றுக்​கொண்டு புதுமை படைக்​கும் வாய்ப்​பைப் பெற்​றுள்​ளனர்.

உள்​ளூர் பொருட்​களுக்கு ஆதரவு

வங்​காளத் திரை​யுல​கின் புகழ்​பெற்ற நடிகர் உத்​தம் குமாரின் நூற்​றாண்டு விழாவை முன்​னிட்டு அவருக்கு அஞ்​சலி செலுத்​தும் இந்த நேரத்​தில், வரவிருக்​கும் ஜென்​மாஷ்ட​மி, விஸ்​வகர்மா பூஜை மற்​றும் தீபாவளி பண்​டிகைக் காலங்​களில் உள்​ளூர் பொருட்களுக்கு ஆதர​வளிக்​கும் (வோகல் ஃபார் லோக்​கல்) இயக்கத்​துக்கு மக்​கள் அதிக முக்​கி​யத்​து​வம் கொடுக்க வேண்டும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here