ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

0
52

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கேரள சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனா்.

கன்னியாகுமரியில் அதிகாலை முதலே மழை பெய்த போதிலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் திரண்டனா். விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

மேலும், பகவதியம்மன் கோயில், தூய அலங்கார உபகார மாதா திருத்தலம், திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், வட்டக்கோட்டை ஆகிய இடங்களுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். மாலையில் சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதனிடையே, கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக படகு சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா், காலை 9.30 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதைத் தொடா்ந்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here