“மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்” – ராகுல் காந்தி

0
27

நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக போராடிய மாணவர்​கள் மீதான காவல் துறை நடவடிக்​கைக்கு மத்​திய அரசு பொறுப்​பேற்க வேண்​டுமென ராகுல் காந்தி கூறி​யுள்​ளார்.

‘தி இந்​து’ ஆங்​கில நாளிதழில் அவர் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடத்​தி​ய​போது மாணவர்​கள் மீது காவல் துறை ‘முட்​கள் பதிக்​கப்​பட்ட லத்தி​கள்’ மற்​றும் துகள் துப்​பாக்​கி​களை (பெல்​லட் கன்​ஸ்) பயன்படுத்​தி​யது.

இதில் பல மாணவர் போராளி​களுக்கு எலும்பு முறி​வு, வெட்​டுக்​கா​யம் மற்​றும் சிராய்ப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளன. பிஹாரின் சியான் நகரில், ஏ.கே-47 உள்​ளிட்ட துப்​பாக்​கி​களால் சுடப்​பட்​ட​தில் பல போராளி​கள் காயமடைந்​தனர்​.

உயர்​மட்ட அதி​காரி​களின் அனு​ம​தி​யின்றி இது​போன்ற நடவடிக்​கையை காவல் துறை எடுத்​திருக்​காது. போராட்​டக் களத்​தில் குவிக்​கப்​பட்​டிருந்த டெல்லி காவல் துறை​யும், விரைவு அதிரடிப் படை​யும் (ஆர்​ஏஎப்) உள்​துறை அமைச்​சகத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் வருபவை்.

இதற்கு இரண்டு சாத்​தி​யக்​கூறுகள் மட்​டுமே உள்​ளன. முதலா​வ​தாக, மாணவர்​கள் மீதான தாக்​குதலுக்கு மத்​திய உள் துறை அமைச்​சர் அனு​மதி அளித்​திருப்​பார் – அப்​படி​யா​னால் அவர் குற்​ற​வாளி. இரண்​டாவ​தாக, இது நடந்​தது அவருக்​குத் தெரிய​வில்லை – அதாவது அவர் முற்​றி​லும் திறமையற்​றவர். எவ்​வாறா​யினும், உள்​துறை அமைச்​ச​ராக, அன்​றைய தினம் நடந்த நிகழ்​வு​களுக்கு பொறுப்​பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்​டும்.

எதிர்க்​கட்​சிகள் இளைஞர்​களுக்கு உறு​துணை​யாக நிற்​கும். இளைஞர்​களுக்கு எதி​ராக இது​போன்ற வன்​முறை​யில் ஈடுபட்டவர்​களுக்​கு தண்​டனை பெற்​றுத்​ தருவோம்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here