கடன் கொடுப்பதாக கூறி பத்திரம் மோசடி: மூதாட்டிக்கு நேரில் ஆறுதல் கூறிய எஸ்.பி. ஸ்டாலின்

0
71

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு கடன் கொடுப்பதாகக் கூறி, அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் நீதி கேட்டு நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வாசலில் காத்திருந்த மூதாட்டியை, அலுவலகத்திலிருந்து காரில் வெளியே வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் காரை நிறுத்தி நேரில் அழைத்து விசாரித்தார்.

மூதாட்டியின் குறைகளை கேட்டறிந்த எஸ்.பி., உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

மூதாட்டியின் கோரிக்கையை நேரில் கவனித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த எஸ்.பி.யின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here