கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது: புதிய விதிகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

0
22

கடன் வாங்​கிய​வர்​களை மிரட்​டு​தல், திட்​டு​தல், சமூக வலை​தளங்​களில் தொல்லை தருதல் போன்ற செயல்​களில் வங்கி ஏஜெண்டுகள் ஈடு​படக்​ கூ​டாது என்று இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதி​களை வெளி​யிட்​டுள்​ளது.

இது கடன் வாங்​கிய​வர்​களுக்கு பெரிய அளவில் நிம்​ம​தியை அளிக்கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​தி​யா​வில் வங்​கி​கள் மற்​றும் நிதி நிறு​வனங்​களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறும் வாடிக்​கை​யாளர்​களை, வசூல் முகவர்​கள் அச்​சுறுத்​து​வதைத் தடுக்​கும் நோக்​கில் இந்​திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த புதிய அதிரடி உத்​தர​வைப் பிறப்பித்துள்ளது.

கடன் நிலு​வையை வசூலிப்​பது வங்​கி​யின் உரிமை​யாக இருந்தாலும், அது வாடிக்​கை​யாளரின் தனிப்​பட்ட சுதந்​திரம், கண்ணி​யம் மற்​றும் தனி​யுரிமை​யைப் பாதிக்​கும் வகை​யில் அமையக் ​கூ​டாது என ரிசர்வ் வங்கி தெளி​வாகக் குறிப்​பிட்டுள்ளது.

வங்​கி​கள் மற்​றும் வசூல் முகவர்​களுக்​கான இந்த ஒருங்​கிணைந்த புதிய வழி​காட்​டு​தல் விதி​முறை​கள் 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நாடு முழு​வதும் அதி​காரப்​பூர்​வ​மாக அமலுக்கு வரவுள்​ளன.

கடன் வாங்​கிய​வர்​களை, வசூல் செய்​யும் வங்கி ஏஜெண்​டு​கள், மிரட்​டு​தல், திட்​டு​தல், சமூக வலை​தளங்​களில் தொல்லை தருதல் போன்ற செயல்​களில் ஈடு​படக்​கூ​டாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்​துள்​ளது.

புதிய விதி​களின்​படி, வங்கி வசூல் முகவர்​கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்​டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்​ளவோ அல்​லது நேரில் சென்று சந்​திக்கவோ முடியும்.

மேலும், தெரி​யாத அல்​லது புதிய செல்​போன் எண்​களில் இருந்து அழைப்​பது, அச்​சுறுத்​தும் வார்த்​தைகளைப் பயன்​படுத்​து​வது, வாடிக்​கை​யாளர்​களை திட்​டு​வது, மிரட்​டு​வது, சமூக வலைதளங்களில் வாடிக்​கை​யாளரின் விவரங்​களைப் பதி​விட்டு தொல்லை தரு​வது மற்​றும் உறவினர்​கள், நண்​பர்​களைத் தொடர்பு​கொண்டு தொந்​தரவு செய்​வது முற்​றி​லு​மாகத் தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

வசூல் முகவர்​கள் தங்களது அடை​யாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here