உலகக் கோப்பை தொடரில் காவி நிற உடையில் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணிகள்!

0
17

உல​கக் கோப்பை ஹாக்கி தொடரில் விளை​யாடும் இந்திய அணியின் சீருடை, நீல நிலத்​திலிருந்து காவி நிறத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. இது பல்​வேறு சர்ச்​சைகளை உரு​வாக்கி உள்ளது.

சர்​வ​தேச ஹாக்கி கூட்​டமைப்பு நடத்​தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்​ஜி​யம் மற்றும் நெதர்​லாந்​தில் நடை​பெற உள்​ளது. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் இந்​திய ஆடவர், மகளிர் அணி​களின் சீருடை பாரம்​பரியமிக்க நீல நிறத்​துக்கு பதிலாக முழு​வது​மான காவிநிறத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

தனது அதி​காரப்​பூர்வ சமூக வலைதள பக்​கத்​தில் இந்​திய ஹாக்கி அணி​யின் புதிய சீருடையை ஹாக்கி இந்​தியா அமைப்பு வெளி​யிட்​டுள்​ளது. வீரர்​கள் மற்​றும் உதவிப் பணி​யாளர்​களு​டன் கலந்​தாலோ​சிக்​கப்​பட்ட பிறகே இந்த ஆடை வடிவ​மைப்பு இறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக ஹாக்கி இந்​தியா அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

மேலும், இந்​தச் சீருடை​யின் வண்​ண​மும் வடிவ​மைப்​பும் ஒரு கதையைக் கூறு​வதோடு, இந்​தி​யா​வின் பெரு​மையை சுமந்து நிற்​கும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. சீருடை​யில் உள்ள காவி நிறம் துணிவு, தியாகம் மற்​றும் வெற்​றி​யின் குறி​யீ​டாக அமைந்​திருப்​ப​தாக​வும் ஹாக்கி இந்​தியா கூறி​யுள்​ளது.

இதுதொடர்​பாக ஹாக்கி இந்​தியா அளித்​துள்ள விளக்​கம் பின்வருமாறு: தற்​போது சர்​வ​தேச ஹாக்கி போட்​டிகளில் நீல நிறச் செயற்கை புல்​வெளி மைதானங்​களே பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதனால், நமது அணி​யினர் நீல நிறச் சீருடை அணிந்து விளை​யாடும்​போது, அது மைதானத்​தின் நிறத்​தோடு ஒன்​றிப் போவது கவனிக்​கப்​பட்​டது.

இந்த ஒரே மாதிரி​யான நிற அமைப்​பு, போட்​டிகளின் போது களத்​தில் வீரர்​களுக்​கானப் பார்​வைத் தெளிவை​யும், சக வீரர்​களை அடை​யாளம் காண்​ப​தை​யும் பாதித்​தது. இதனைத் தொடர்ந்​து, பயிற்​சி​யாளர்​களும் வீரர்​களும் மஞ்​சள் அல்​லது காவி போன்ற மாற்று வண்​ணங்​களைப் பயன்​படுத்​தப் பரிந்​துரைத்​தனர். இது குறித்து தீவிர​மாக பரிசீலித்த பின்​னரே, இறு​தி​யில் காவி நிறம் தேர்வு செய்​யப்​பட்டு இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

தொழில்​நுட்ப ரீதியி​லான தேவையைப் பூர்த்தி செய்​வது மட்​டுமின்​றி, நமது தேசி​யக் கொடி​யின் முக்​கிய வண்​ணங்​களில் ஒன்​றான காவி நிறம் துணிவு, தியாகம் மற்​றும் தேசி​யப் பெரு​மை​யின் அடை​யாள​மாகத் திகழ்​வ​தால், இது ஆழமான முக்​கி​யத்​து​வம் பெறுகிறது. மேலும், இந்​தி​யா​வின் பண்​பாட்​டுப் பாரம்​பரி​யத்​தைப் போற்​றும் வகை​யில், சீருடை​யில் ‘மண்​டலா’ கலை பாணியி​லான வடிவங்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

அத்​துடன், இதில் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள அடர் நீல நிறக் கோடு​கள் நாட்​டின் வளர்ச்​சி, அமைதி மற்​றும் இலக்கை நோக்​கிய கவனத்​தைக் குறிக்​கும் அசோகச் சக்​கரத்தை மைய​மாகக் கொண்டு வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. சீருடை​யின் நெஞ்​சுப் பகு​தி​யில் இடம்​பெற்​றுள்ள வரைபடம், ‘வலிமை, ஒற்​றுமை மற்​றும் வேகம்’ ஆகிய​வற்​றைக் குறிக்​கும் சுதர்​சனச் சக்​கரத்​தின் நவீன வடிவ​மைப்​பாகும். மேலும், தோள்​பட்​டைகள் மற்​றும் பக்​க​வாட்​டுப் பகு​தி​களில் அமைக்​கப்​பட்​டுள்ள மூவர்​ணக் கோடு​கள் தேசி​யப் பெரு​மையை வலுப்​படுத்​துகின்​றன.

நாட்​டின் ‘மொழி​யியல் மற்​றும் பண்​பாட்​டுப் பன்​முகத்​தன்​மை​யைக் கொண்​டாடும் வகை​யில்’, சீருடை​யின் முன்​பகு​தி​யில் ‘இந்​தி​யா’ என்ற வார்த்தை நளின​மான ‘தேவ​நாகரி’ எழுத்​துரு​வில் பொறிக்​கப்​பட்​டுள்​ளது. காவி நிறத்தை தவிர, இதே புதிய வடிவ​மைப்​பைக் கொண்ட வெள்ளை நிற சீருடைகளும் இந்​திய அணி​யில் இடம்​பெறும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளது.

முன்​னாள் கேப்​டன் அதிருப்தி

இந்​திய ஹாக்கி அணி​யின் முன்​னாள் கேப்​டன் விரேன் ரஸ்​கின்ஹா தனது எக்ஸ் பதி​வில், “இந்​திய ஹாக்கி நிர்​வாகம் நாட்​டிற்​காக பல நல்ல காரி​யங்​களைச் செய்​துள்​ளது என்​பதை நான் ஒப்​புக்​கொண்டே ஆக வேண்​டும். ஆனால், தற்​போதது இந்த சீருடை நிற மாற்ற நடவடிக்கை உண்​மை​யிலேயே சங்​கடத்தை ஏற்​படுத்​துகிறது.

இந்​திய அணி​யின் பாரம்​பரிய​மும் அடை​யாள​மும் எப்​போதும் ‘நீல நிறம்’ தான். பல ஆண்​டு​களாக அந்த நீல நிறச் சீருடையை நான் மிகுந்த பெரு​மை​யுடன் அணிந்து விளை​யாடி​யிருக்​கிறேன். ரசிகர்​கள் நமது இந்​திய அணியை நீல நிறத்​திலேயே பார்க்க விரும்​பு​கிறார்​கள். இதில் காவி நிறத்​தைக் கொண்டு வந்​ததன்​ தர்க்​கம்​ என்​னவென்​று புரிய​வில்​லை?” எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here