நீட் தேர்வுத் தாள் கசிவு: பிவால் சகோதரர்கள் ஜாமீன் மனு விரைவு நீதிமன்றம் இன்று விசாரணை

0
17

நீட் தேர்​வுத் தாள் கசிவு வழக்​கில் கைது செய்யப்பட்டுள்ள பிவால் சகோ​தரர்​களின் ஜாமீன் மனுக்​களை சிறப்பு விரைவு நீதி​மன்​றம் இன்று விசா​ரிக்​கிறது.

நீட் தேர்​வுத் தாள் கசிவு வழக்​கில் தினேஷ் பிவால், விகாஸ் பிவால் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வினாத்​தாள் கசி​வில் ஈடுபடு​பவர்​களுக்கு விரை​வான தண்​டனை வழங்க விரைவு நீதிமன்​றங்​கள் அமைக்​கப்​படும் என ஜூலை 23 அன்று பிரதமர் மோடி தெரி​வித்​திருந்​தார்.

இதனைத் தொடர்ந்​து, பொதுத் தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) சட்​டம், 2024-ன் கீழ் பதி​வான வழக்​கு​களை விசா​ரிக்க ரோஸ் அவென்யூ நீதி​மன்​றத்​தில் சிறப்பு விரைவு நீதி​மன்​றம் அமைக்கப்பட்​டது.

டெல்லி உயர் நீதி​மன்​றப் பதி​வாளர் ஜெனரல் அருண் பரத்​வாஜ் பிறப்​பித்த உத்​தர​வின்​படி, திஸ் ஹஸாரி நீதி​மன்ற மத்​தி​யஸ்த மையப் பொறுப்பு நீதிப​தி​யாக இருந்த அனு குரோவர் பாலி​கா, இந்த புதிய விரைவு நீதி​மன்​றத்​தின் சிறப்பு நீதிப​தி​யாக (சிபிஐ) இடமாற்​றம் செய்​யப்​பட்​டார். மேலும், நிலு​வை​யில் உள்ள வழக்குகளை இந்த நீதி​மன்​றத்​திற்கு மாற்​ற உத்​தர​விடப்​பட்​டது.

இந்த விரைவு நீதி​மன்​றம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்ள நிலை​யில், கைது செய்​யப்​பட்​டுள்ள பிவால் சகோ​தரர்​களின் ஜாமீன் மனுக்கள் இன்று விசா​ரணைக்கு வரு​கின்​றன. சிறப்பு நீதிபதி அனு குரோவர் பாலி​கா, ரோஸ் அவென்யூ நீதி​மன்ற வளாகத்​தின் அறை எண் 408-ல் இந்​த மனுக்​களை வி​சா​ரிக்​க​உள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here