செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை

0
20

தவெக ஆட்​சியை கவிழ்க்க முயன்ற குற்​றச்​சாட்​டில் முன்​னாள் அமைச்​சர் செந்தில் பாலாஜி​யிடம் போலீ​ஸார் 2-வது நாளாக விசா​ரணை நடத்​தினர்.

ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெற்​றனர்.

திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் தின​மும் காலை, மாலை​யில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும். போலீ​ஸாரின் விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதன்படி செந்​தில்​பாலாஜி, அசோக்​கு​மார் இருவரும் நேற்று முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது அவர்​களிடம் காவல் துணை ஆணை​யர் ஜெயச்​சந்​திரன் தலை​மை​யில் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இந்​நிலை​யில், செந்​தில்​பாலாஜியும் அசோக்​கு​மாரும் நேற்று 2-வது நாளாக காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது, அவர்​களிடம் போலீ​ஸார் சுமார் 2 மணி நேரம் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here