மயங்க் யாதவ், சூர்யவன்ஷி அபாரம்: ஸ்ரேயஸ் தலைமையில் இந்திய அணிக்கு முதல் வெற்றி

0
22

ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான முதல் டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. ஹராரே​வில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இந்​திய அணி​யில் வேகப்​பந்து வீச்​சாள​ரான அசோக் சர்மா அறி​முக வீர​ராக களமிறங்​கி​னார். முதலில் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 125 ரன்​கள் எடுத்​தது.

2024-ம் ஆண்​டுக்கு பிறகு அணிக்கு திரும்​பிய வேகப்​பந்து வீச்​சாள​ரான மயங்க் யாதவ் வீசிய ஆட்​டத்​தின் முதல் பந்​திலேயே ரன் ஏதும் எடுக்​காமல் பிரையன் பென்​னட் விக்​கெட் கீப்​பர் இஷான் கிஷனிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். மற்​றொரு தொடக்க வீர​ரான பென் கரண் 10 ரன்​களில் பிரின்ஸ் யாதவ் பந்​தில் நடையை கட்​டி​னார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய தியோன் மையர்ஸ் 6 ரன்​களில் மயங்க் யாதவ் பந்​தி​லும், கேப்​டன் சிகந்​தர் ராசா 4 ரன்​களில் ஷிவம் துபே பந்​தி​லும் வெளி​யேறினர்.

32 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை பறி​கொடுத்த நிலை​யில் ரியான் பரூல் 35 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 26 ரன்​களும், வெஸ்ஸி மாதவரே 34 பந்​துகளில், 3 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 39 ரன்​களும், மரு​மானி 20 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​களும் சேர்த்த​தால் ஜிம்​பாப்வே அணி​யால் சற்று கவுர​வ​மான இலக்கை கொடுக்க முடிந்​தது.

இந்​திய அணி தரப்​பில் மயங்க் யாதவ் 4 ஓவர்​களை வீசி 18 ரன்​களை வழங்கி 2 விக்​கெட்​களை​யும், பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்​களை வீசி 19 ரன்​களை வழங்கி 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை கைப்​பற்​றினர். 126 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி 13.2 ஓவர்​களில் 3 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. 15 வயதாகும் வைபவ் சூர்​ய​வன்ஷி தனது முதல் சர்​வ​தேச அரை சதத்தை விளாசிய நிலை​யில் 19 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரிச்​சர்டு நகரவா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா ஒரு ரன்​னில் வெளி​யேறி​னார். இஷான் கிஷன் 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரி​களு​டன் 35 ரன்​கள் எடுத்த நிலை​யில் முசர​பானி பந்தில் ஆட்​ட​மிழந்​தார். கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும், திலக் வர்மா 6 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஆட்ட நாயக​னாக மயங்க் யாதவ் தேர்​வா​னார்.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மை​யில் இந்​திய அணி டி 20 போட்​டி​யில் முதல் வெற்​றியை பதிவு செய்​துள்​ளது. சமீபத்​தில் அவரது தலை​மை​யில் இந்​திய அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 6-ல் தோல்வி கண்​டிருந்​தது. ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்​டம் இதே மைதானத்​தில் நாளை (25-ம் தேதி) நடை​பெறுகிறது.

இளம் வயதில் அரை சதம்

இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான வைபவ் சூர்​வன்​ஷி, ஜிம்பாப்வே அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 18 பந்​துகளில் அரை சதம் அடித்​தார். இதன் மூலம் சர்​வ​தேச டி20 போட்​டி​யில் இளம் வயதில் (15 வயது, 118 நாட்​கள்) அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்​தார். இதற்கு முன்​னர் இளம் வயதில் அரை சதம் அடித்த சாதனையை நேபாளத்​தின் குஷால் மல்லா (15 வயது 340 நாட்​களில்) நிகழ்த்​தி​யிருந்​தார். இதை தற்​போது முறியடித்து புதிய சாதனை படைத்​துள்​ளார் சூர்ய​வன்​ஷி.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here