தமிழக அரசின் மதுபான கொள்முதலில் மாற்றம்: உற்பத்தியாளர்களிடம் இருந்து சம அளவில் வாங்க முடிவு

0
25

மதுபானக் கொள்​முதலில் அனைத்து மது உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்​தும் சம அளவில் கொள்​முதல் செய்​யப்​படும் என, டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். தமிழகத்​தில் உள்ள டாஸ்​மாக் கடைகளில் இந்​திய தயாரிப்பு வெளி​நாட்டு வகை மது​பானங்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

இந்த மது​பானங்​களை டாஸ்​மாக் நிர்​வாகம் மது​பான உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்து கொள்​முதல் செய்து சில்​லறை விற்​பனை கடைகள் மற்​றும் மனமகிழ் மன்​றங்​கள் போன்ற உரிமம் பெற்​றவர்​களுக்கு வழங்கி வரு​கிறது.

குறிப்பாக, சில குறிப்​பிட்ட உற்​பத்​தி​யாளர்​களிடம் இருந்து மட்​டுமே அதி​கள​வில் மது​பானம் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் இருந்​தன. இந்​நிலை​யில், தற்​போது அனைத்து உற்​பத்​தி​யாளர்​களிடம் இருந்​தும் சமஅளவில் மது​பானம் கொள்​முதல் செய்​யப்​பட​வுள்​ளது.

இதுகுறித்து, டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: டாஸ்​மாக் நிர்​வாகம் தற்​போது 17 உற்​பத்​தி​யாளர்​களிடம் இருந்து மது​பானங்​களை கொள்​முதல் செய்​கிறது.

இந்​நிலை​யில், ஒவ்​வொரு பிராண்​டின் 3 மாத சராசரி விற்​பனையை​யும், முந்​தைய வார விற்​பனையை​யும் ஒப்​பிட்டு கொள்​முதல் ஆணை​கள் வழங்​கப்​பட்​டன.

இந்த நடை​முறை ஒரு தலைப்​பட்​ச​மாக இருப்​ப​தாக உற்​பத்​தி​யாளர்​கள் கூறினர். இதையடுத்து, தற்​போது அனைத்து உற்​பத்​தி​யாளர்​களுக்​கும் சமமான வாய்ப்பு வழங்​கும் வகை​யிலும், வாடிக்​கை​யாளர்​கள் கூடு​தலாக அவர்​கள் விரும்​பியதை தேர்வு செய்​யும் வகை​யிலும் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, அனைத்து உற்​பத்​தி​யாளர்​களுக்​கும் சமமான அளவில் கொள்​முதல் ஆணை​களை வழங்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இதனிடையே, “அனைத்து மது​பான உற்​பத்தி நிறு​வனங்​களிடம் இருந்​தும் சமமாக கொள்​முதல் செய்​தால், வாடிக்​கை​யாளர் விரும்​பும் குறிப்​பிட்ட மது​வகை கிடைக்​காத நிலை ஏற்​படும்.

ஏனெனில், ஒரு சில மது​பான வகையை வாடிக்​கை​யாளர் அதிக அளவில் விரும்​பும் நிலை​யில் அதை அதி​கள​வில் கொள்​முதல் செய்​யாமல், அனைத்​தை​யும் சமமான அளவில் கொள்​முதல் செய்​வது என்​பது மறை​முக​மாக குறிப்​பிட்ட நிறு​வனத்​தின் மது​வகை அதிக அளவில் கொள்​முதல் செய்ய வழி​வகுக்​கும் செய​லாகவே முடி​யும்​” என தொழிற்​சங்​கத்​தினர்​ தெரி​வித்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here