வயதான கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் திட்டம்: 3 மாதத்தில் கொள்கை வகுக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
12

குணப்​படுத்த முடி​யாத நோயால் பாதிக்​கப்​பட்ட கைதிகள் மற்​றும் 70 வயதுக்கு மேற்​பட்ட கைதி​களை மனிதாபிமான அடிப்​படை​யில் முன்​கூட்​டியே விடு​தலை செய்வதற்​கான கொள்​கையை 3 மாதங்​களுக்​குள் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உரு​வாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

குணப்​படுத்த முடி​யாத நோய்​களால் அவதிப்​படும் மற்​றும் 70 வயதுக்கு மேற்​பட்ட வயது முதிர்ந்த கைதி​களை கருணை அடிப்படை​யில் முன்​கூட்​டியே விடு​தலை செய்​வது குறித்து நாடு தழு​விய வழி​காட்​டு​தல்​களை உரு​வாக்​கக் கோரி உச்ச நீதி​மன்றத்தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசாரித்த நீதிப​தி​கள் விக்​ரம் நாத் மற்​றும் சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்வு அனைத்து மாநில அரசுகளுக்​கும் முக்​கிய உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ளது.

அதன்​படி, அந்​தந்த மாநில சட்​டப் பணி​கள் ஆணைக் குழு​வுடன் இணைந்​து, தகு​தி​யான கைதி​களை அடை​யாளம் காணும் ஒருங்கிணைந்த கொள்​கையை வகுத்து 3 மாதங்​களுக்​குள் வெளியிட வேண்​டும் என்று நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

“குணப்படுத்த முடி​யாத தீராத நோய்” என்​ப​தற்கு ஐக்​கிய நாடுகள் சபை வெளி​யிட்​டுள்ள கையேட்​டின் அடிப்​படை​யில் தெளி​வான, சீரான வரையறையை உரு​வாக்க வேண்​டும். கைதிகளின் உடல்​நிலையை பாரபட்​சமின்றி துல்​லிய​மாக ஆய்வு செய்ய மாவட்ட மற்​றும் மாநில அளவி​லான சுதந்​திர​மான மருத்துவக் குழுக்​களை அமைக்க வேண்​டும்.

காலக்கெடு…

விடு​தலை செய்​யக் கோரும் விண்​ணப்​பங்​களை பரிசீலிக்க காலக்​கெடுவை நிர்​ண​யிக்க வேண்​டும். வெளிப்​படைத்​தன்​மையை உறுதி செய்ய ‘இ-பிரிசன்​ஸ்’ இணை​யதள போர்ட்​டலுடன் அனைத்து விவரங்​களை​யும் இணைக்க வேண்​டும், குறிப்​பாக, விண்​ணப்​பம் சமர்ப்​பிப்​பது முதல் மருத்​து​வக் குழு​வின் பரிந்​துரை மற்​றும் இறுதி முடிவு வரை அனைத்​தும் போர்ட்​டலில் பதிவு செய்​யப்பட வேண்​டும்.

இதற்​கான டிஜிட்​டல் மற்​றும் தொழில்​நுட்ப உள்​கட்​டமைப்பு வசதி​களை அனைத்து மாநிலங்​களுக்​கும் மத்​திய அரசு வழங்க வேண்​டும் என்று நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். இந்த உத்​தர​வு​கள் முறை​யாகப் பின்​பற்​றப்​படு​கிறதா என்​பதை ஆய்வு செய்​வதற்​காக அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வழக்கு வி​சா​ரிக்​கப்​படும்​ என்று நீதிப​தி​கள்​ தெரி​வித்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here