கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

0
24

கும்மிடிப்பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்டை தனி​யார் தொழிற்​சாலை​யில் பர்​னஸ் கொதி​கலன் வெடித்​த​தில், வடமாநில தொழிலாளி ஒரு​வர் உயி​ரிழந்​தார்; 9 பேர் காயமடைந்​தனர்.

இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர் குடும்​பத்​தினர் மற்​றும் காயமடைந்​தோருக்கு நிதி​யுதவி வழங்க முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில், ‘ஜெ​யின் ரிசோர்ஸ் ரிசைக்​கிளிங் லிமிடெட் (யுனிட் 2)’ என்ற தனி​யார் தொழிற்​சாலை செயல்​பட்டு வரு​கிறது.

இத்​தொழிற்​சாலை​யில், பழைய ஈயம், செம்பு உள்​ளிட்ட உலோகங்​களை பிரித்து எடுத்து உருக்கி கட்​டிகளாக உரு​வாக்​கப்​பட்டு வரு​கிறது. சுமார் 5 ஆண்​டு​களாக செயல்​பட்டு வரும் இந்த தொழிற்​சாலை​யில், 800 தொழிலா​ளர்​கள் 3 ஷிப்ட்​களாக பணிபுரிந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 5.30 மணி​யள​வில், தொழிற்​சாலை​யின் பர்​னஸ் பகு​தி​யில் வடமாநில தொழிலா​ளர்​கள் 10 பேர் பணி​யில் ஈடு​பட்​டுக் கொண்​டிருந்​தனர். அப்​போது, பலத்த சத்​தத்​துடன் பர்​னஸ் கொதி​கலன் வெடித்து சிதறியது.

இதனால், தொழிற்​சாலை​யின் மேற்​கூரை உட்பட சுமார் 40 மீட்​டர் சுற்​றளவுள்ள பகுதி கடுமை​யாக சேதமடைந்​தது. இந்த விபத்​தில், பிஹார் மாநிலத்தை சேர்ந்த ரவிரஞ்​சன் (24) என்ற தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

அவருடன் பணியி​லிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஓம்​கு​மார் (22), பூசன்​கு​மார் (25), ராஜாபப்பு (26), அரவிந்த்​கு​மார் (26), ரன்​வீர்​கு​மார் (27), பிரின்​ஸ்​கு​மார் (27), ரஞ்​சித்​கு​மார் (35), கமலேஷ் (40), மத்​திய பிரதேசத்​தைச் சேர்ந்த சிம்​பர் சிங் (24)ஆகிய 9 பேர் காயமடைந்​தனர்.

இதுகுறித்​து, தகவலறிந்த கும்​மிடிப்​பூண்​டி, கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தீயணைப்பு மற்​றும் மீட்​புப் படை​யினர் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணி மற்​றும் தீப்​பிடித்த பகு​தி​களில் தீயணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இப்​பணி​யில், காயமடைந்​தவர்​கள் மீட்​கப்​பட்​டு, 108 ஆம்​புலன்ஸ் மூலம் கும்​மிடிப்​பூண்டி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

அங்கு சிகிச்சை பெற்​றவர்​களில், 7 பேர் மேல் சிகிச்​சைக்​காக சென்​னை, கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் சிறுணி​யம் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை ஆகிய​வற்​றுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

அங்கு அவர்​கள் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். 2 பேர் கும்​மிடிப்​பூண்டி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று தங்​குமிடங்​களுக்கு திரும்​பி​யுள்​ளனர்.

மேலும், சிறுணி​யம் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் 3 தொழிலா​ளர்​களை நேற்று செயற்கை நுண்​ணறி​வு, தகவல் தொழில் நுட்​ப​வியல் மற்​றும் டிஜிட்​டல் சேவை​கள் துறை அமைச்​சர் குமார், ஆட்​சி​யர் கவிதா ஆகியோர் நேரில் சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

இந்​நிகழ்​வின் போது, கும்​மிடிப்​பூண்டி எம்​எல்ஏ எஸ்​.​விஜயகு​மார், பொன்​னேரி சார் ஆட்​சி​யர் அப்​துல் ராசிக், மாவட்ட சுகா​தார அலு​வலர் (திரு​வள்​ளூர்) பிரி​யா​ராஜ் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். தொழிற்சாலையில் பல்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து ரூ.2 லட்​சம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உடலை அரசு செல​வில் சொந்த மாநிலத்​துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்​கொள்​ளவும் உத்தரவிட்டுள்ளார். படு​காயமடைந்​த 3 பேருக்​கு தலா ரூ.1 லட்​சம்​, லே​சான ​காயமடைந்​த 6 பேருக்​கு தலா ரூ.50 ஆயிரம்​ வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here