ரயில்வே ஏசி பெட்டிகளில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட் சீட், துண்டுகள் மாயம்

0
17

இந்​திய ரயில்​வே​யில் பயணம் செய்​யும் ஏசி வகுப்பு பயணி​களில் சிலர், தங்​களுக்கு வழங்​கப்​படும் பெட்​சீட் மற்​றும் துண்​டு​களைத் திருடிச் செல்​லும் அதிர்ச்சி தகவல் தற்​போது வெளிவந்​துள்​ளது. கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் சுமார் 1.27 கோடிக்​கும் அதி​க​மான பெட்​சீட், போர்​வை​கள் மற்​றும் துண்​டு​கள் திருடப்​பட்​டுள்​ளது தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் (ஆர்​டிஐ) கீழ் பெறப்​பட்ட புள்​ளி​விவரங்​களின் மூலம் தெரிய​ வந்​துள்​ளது.

இந்​திய ரயில்வே நெட்​வொர்க்​கில் தின​மும் இரவில் சுமார் 8 லட்சம் ஏசி வகுப்பு பயணி​கள் பயணிக்​கின்​றனர். இவர்​களது பயணச் சீட்​டுக் கட்​ட​ணத்​திலேயே இரண்டு பெட்​சீட்​டு​கள், ஒரு போர்​வை, ஒரு தலை​யணை, தலை​யணை உறை மற்​றும் ஒரு முகத்​தைத் துடைக்​கும் துண்டு ஆகியவை அடங்​கிய படுக்கை விரிப்பு சேவை வழங்​கப்​படு​கிறது. ஆனால், இந்த சேவையைப் பயன்​படுத்​தும் பயணி​களில், சராசரி​யாக 1,000 பயணி​களில் ஒருவர், தங்​களுக்கு வழங்​கப்​படும் துணி வகை​களில் ஏதேனும் ஒன்றை திருடிச் செல்​வது புல​னாய்வு ஒன்​றில் தெரிய​வந்​தது.

ரயில்​வே​யில் மொத்​தம் உள்ள 69 கோட்​டங்​களில் தாக்​கல் செய்யப்​பட்ட ஆர்​டிஐ மனுக்​களில், 54 கோட்​டங்​கள் வழங்​கிய தரவு​களின்​படி, கரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிறகு இந்த சேவை முழு​மை​யாகத் தொடங்​கப்​பட்ட 2022 ஜனவரி முதல் 2026 மே மாதம் வரையி​லான கால​கட்​டத்​தில் மட்​டும் 1.27 கோடிக்​கும் அதிக​மான துணிப் பொருட்​கள் திருடப்​பட்​டுள்​ளன. மேலும், 2022ம் ஆண்​டோடு ஒப்​பிடும்​போது 2025-ல் இந்​தத் திருட்டு சம்பவங்​கள் 56% அதி​கரித்​துள்​ளது. பயணி​களின் இந்த கைவரிசை​யால் கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் படுக்கை விரிப்பு ஒப்​பந்​த​தா​ரர்​களுக்​குச் சுமார் ரூ.104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள​தாக ஆர்​டிஐ தரவு​கள் கூறுகின்​றன.

இது குறித்து ரயில்வே அமைச்​சகத்​தின் செய்​தித் தொடர்​பாளர் கூறுகை​யில், “இந்த விவ​காரம் மிக​வும் தீவிர​மான கவலைக்​குரிய ஒன்​றாகும். துணி திருட்​டைத் தடுக்​க​வும், குற்​ற​வாளி​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் தொடர் முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அதே நேரத்​தில், இதில் ரயில்வே ஊழியர்​கள் கூட்டுச்சதி செய்​ததற்​கான எந்​தவொரு ஆதா​ர​மும் இல்​லை” என்று தெரி​வித்​துள்​ளார்.

திருச்​சி, பாலக்​காடு… நேர்மை: இந்​தி​யா​விலேயே மொத்​தம் உள்ள 7 ரயில்வே மண்​டலங்​களைச் சேர்ந்த டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 முக்​கிய கோட்​டங்​களில்​தான் 67% திருட்​டு​கள் அரங்கேறுகின்​றன. இந்​திய ரயில்வே கோட்​டங்​களில் லட்​சக்​கணக்​கில் துணி​கள் திருடப்​பட்டு வரும் வேளை​யில், தென்னிந்தியா​வில் உள்ள கோட்​டங்​கள் இதில் மிக நேர்​மை​யாகச் செயல்​பட்டு முன்​மா​திரி​யாகத் தி​கழ்​கின்​றன. தெற்கு ரயில்வேயின் கீழ் வரும் திருச்சி மற்​றும் பாலக்​காடு ஆகிய இரு கோட்​டங்​களில் ஒரு துணி கூட திருடப்​பட​வில்​லை என்​ற விவரமும்​ தெரிய​வந்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here