நியூசிலாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

0
20

இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்​திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயண​மாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்​றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சன் நேரடி​யாக விமான நிலை​யத்​துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்​றார்.

விமான நிலைய வளாகத்​தில் இந்​திய வம்​சாவளி​யினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். கடந்த 1968-ம் ஆண்​டில் அப்​போதைய இந்​திய பிரதமர் இந்​திரா காந்தி நியூசிலாந்​துக்கு சென்​றார். கடந்த 1986-ம் ஆண்​டில் அன்​றைய இந்​திய பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்​தில் பயணம் மேற்​கொண்​டார். இதன்​பிறகு சுமார் 40 ஆண்​டு​களுக்​குப் பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்​துக்கு சென்​றுள்​ளார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்​டோபர் லக்​சனை அவர் இன்று சந்​தித்து அதி​காரப்​பூர்​வ​மாக பேச உள்​ளார். அப்​போது பாதுகாப்பு, கல்வி, அறிவியல் உட்பட பல துறைகளில் ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்​ளன.

கடந்த ஏப்​ரல் 27-ம் தேதி இந்​தி​யா, நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இந்த ஒப்​பந்​தத்தை அமல்​படுத்​து​வது தொடர்​பாக இரு நாடு​களின் பிரதமர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here