சிறுமி பலாத்காரம்: மத்திய அரசு அதிகாரிகளுக்கு 42 ஆண்டு சிறை

0
46

நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவண்ணாமூழியைச் சேர்ந்தவர் சந்திரன் 56. இவர் மத்திய அரசின் மாவட்ட விவசாய பண்ணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகளும், பேத்தியும் உள்ளனர்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி இவரது வீட்டில் விளையாட வருவது வழக்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டில் விளையாட வந்த சிறுமியை சந்திரன் தன் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நாதாபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேவன் கே மேனன், அதிகாரி சந்திரனுக்கு 42 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here