ராஜு ஜெயமோகன் இயக்​கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’

0
22

‘பிக்​பாஸ்’ ராஜு ஜெயமோகன் எழு​தி, இயக்​கி, நடிக்​கும் திரைப்படத்துக்கு ‘ஆல்​மோஸ்ட் நல்​ல​வன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்​ளது.

இதில் முக்​கிய​மான கதா​பாத்​திரத்​தில் சத்​ய​ராஜ் நடிக்​கிறார். துஷாரா விஜயன், இமான் அண்​ணாச்​சி, பிக்​பாஸ் தாமரைச் செல்வி, நாடகக் கலைஞர் யாழினி, பிரிதம் சக்​ர​வர்த்தி ஆகியோரும் நடித்​துள்​ளனர். டி.எஸ்.பிரசன்னா ஒளிப்​ப​திவு செய்கிறார்.

சுதன் சுந்​தரத்​தின் பேஷன் ஸ்டூடியோஸ் ஹெச்​.​வினோத்​தின் ஆஸ்​பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்​தைத் தயாரிக்​கிறது. இதன் தொடக்​க​விழா பூஜை​யுடன் சென்​னை​யில் நடை​பெற்​றது.

படம் ​பற்றி ராஜு ஜெயமோகன் கூறும்​போது,”ஒவ்​வொரு மனிதருக்​குள்​ளும் நல்ல குணங்​களும், குறை​களும் இருக்கின்றன. இன்​றைய டிஜிட்​டல் உலகில் பலர், 2 வாழ்க்கையை வாழ்​கிறார்​கள். ஒன்று அவர்​களின் உண்​மை​யான வாழ்க்​கை. மற்​றொன்​று, சமூக வலை​தளங்​களில் அவர்​கள் உருவாக்​கிக் கொள்​ளும் முகம்.

சில நேரங்​களில் அந்த டிஜிட்​டல் அடை​யாளமே தங்​களின் உண்மை​யான முகம் என்று கூட நம்​பத் தொடங்​கு ​கிறார்​கள். அப்படிப்​பட்ட ஒரு​வரின் வாழ்க்​கை​யில் நடை​பெறும் எதிர்​பா​ராத சம்பவங்​கள்​தான் இந்​தக் கதை. வித்​தி​யாச​மான டார்க் காமெடி மற்​றும் ஃபேமிலி என்​டர்​டெ​யினர் திரைப்​படம்​ இது” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here