ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முதியவர் உடல் சிதைந்து பலி

0
18
Kochi, Kerala, India -March 2, 2021 a train moving with electric support through the indian railway track

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அழகப்பன் 86, பொதுப்பணி துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். குலதெய்வத்தை வழிபட தன் சகோதரர் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டார்.

நேற்று அதிகாலை 4:45 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பை அடைந்தபோது ரயிலில் இருந்து இறங்கிய அழகப்பன் மீண்டும் கழிப்பறை செல்ல ரயிலில் ஏறினார். அப்போது ரயில் புறப்பட்டதும் அழகப்பன் அவசரமாக கீழே இறங்கியபோது நிலை தடுமாறி விழுந்தார். ரயில் பெட்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் அழகப்பன் சிக்கினார்.

ரயில் சென்றபடி இருந்ததால் அவரது உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here