“மரிசான் காப் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்” – ஹர்மன்பிரீத் கவுர்

0
20

 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்​தினம் மான்​செஸ்​டர் நகரில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஹர்மன்பிரீத் கவுர் தலை​மையி​லான இந்திய அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது தென் ஆப்பிரிக்க அணி. 159 ரன்​கள் இலக்கை துரத்​திய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 161 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

மரி​சான் காப் 45 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 81 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். அதேவேளை​யில் அவர், கொடுத்த 2 கேட்ச்​களை லாங் ஆன் திசையில் ராதா யாதவ் பிடிக்​கத் தவறி​னார். இது இந்​திய அணியின் தோல்விக்கு முக்​கிய காரண​மாக அமைந்​தது.

போட்டி முடிவடைந்​ததும் இந்​திய அணி​யின் கேப்​ட​னான ஹர்​மன்​பிரீத் கவுர் கூறிய​தாவது: நடு​வில் எங்​களுக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்​தன, ஆனால் எங்​களால் அந்த வாய்ப்​பு​களைப் பயன்​படுத்​திக் கொள்ள முடி​யாமல் போய்​விட்​டது. ஸ்ரீ சாரணி​யும் ஷஃபாலி வர்​மா​வும் நன்​றாகப் பந்து வீசி​னார்​கள், ஆனால் ஃபீல்​டர்​கள் அவர்​களுக்கு ஒத்​துழைக்​க​வில்​லை. கிடைக்கும் வாய்ப்​பு​களை நாம் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும். அந்த விஷ​யத்​தில் இந்த ஆட்​டத்​தில் எங்​களுக்கு அதிர்ஷ்டம் இல்​லாமல் போய்​விட்​டது.

மரி​சான் காப் ஆட்​டத்தை எங்​களிட​மிருந்து பறித்​துச் சென்​று​விட்டார். அவர் எங்​களுக்கு இரண்டு வாய்ப்​பு​களைக் கொடுத்​தார், அவை மிக முக்​கிய​மான தருணங்​கள், அவை​தான் ஆட்​டத்​தின் போக்கை மாற்​றியது. இந்த ஆட்​டத்​திலிருந்து நிறைய கற்​றல்​கள் கிடைத்​துள்​ளன.

நாங்​கள் நேர்​மறை​யாக இருக்க வேண்​டிய நேரம் இது. மேலும் வரவிருக்​கும் போட்​டிகளில் என்ன செய்ய வேண்​டும் என்று சிந்திக்க வேண்​டும். அடுத்​தடுத்த போட்​டிகளில் நாங்​கள் இன்னும் சிறப்​பாகச் செயல்​படு​வோம் என்று நம்​பு​கிறேன். இவ்வாறு ஹர்​மன்​பிரீத்​ கவுர்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here