இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக விரைந்து செயல்பட அதிகாரிகளுக்கு ட்ரம்ப், மோடி உத்தரவு

0
23

இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்​தாக விரைந்து செயல்பட வேண்​டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்​திர மோடி அவர​வர் நாடு​களின் உயர் அதி​காரி​களுக்கு உத்​தர​விட்டு உள்​ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்​றார். அடுத்த சில மாதங்​களில் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அவர் அறி​வித்​தார். இதன்​படி இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இந்த சூழலில் வரி​வி​திப்பு தொடர்​பான வழக்கை கடந்த பிப்​ர​வரி இறு​தி​யில் விசா​ரித்த அமெரிக்க உச்ச நீதி​மன்​றம், அதிபர் ட்ரம்​பின் வரி விதிப்பை ரத்து செய்​தது.

இதனிடையே வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 20 முதல் 23-ம் தேதி வரை அமெரிக்​கா​வில் இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதன் தொடர்ச்​சி​யாக அமெரிக்​கா​வின் சிறப்பு வர்த்தக குழு​வினர் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை டெல்​லி​யில் முகாமிட்டு இந்​திய குழு​வினருடன் விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இந்த சூழலில் பிரான்​ஸின் எவி​யான் நகரில் நடை​பெற்ற ஜி7 மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று முன்​தினம் சந்​தித்​துப் பேசினர். அப்​போது வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து இரு​வரும் விரி​வாக ஆலோ​சனை நடத்​தினர். அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் இறு​திக் கட்​டத்தை நெருங்கி உள்​ளது’’ என்று தெரி​வித்​தார்.

முக்கிய பேச்சுவார்த்தை

இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் நேற்று வெளியிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாக விரைந்து செயல்​படு​மாறு அவர​வர் நாடு​களின் உயர் அதிகாரிகளுக்கு அதிபர் ட்ரம்​பும், பிரதமர் மோடி​யும் உத்​தர​விட்டு உள்ளனர்.

அமெரிக்க அரசின் சிறப்பு பிர​தி​நிதி ஜேமீசன் கிரீர் அடுத்த வாரம் இந்​தி​யா​வுக்கு வரு​கிறார். அப்​போது இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here