கூடங்குளம் அணுமின் நிலைய 5-வது அலகில் வெற்றிகரமாக 320 டன் அணு உலை அழுத்த கலன் நிறுவப்பட்டது

0
22

திருநெல்​வேலி மாவட்​டம் கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தின் 5-வது அலகில், 320 டன் அணு உலை அழுத்​தகலன் வெற்​றிகர​மாக நிறு​வப்​பட்​டுள்​ளது.

கூடங்​குளத்​தில், ரஷ்​யா​வின் பங்​களிப்​புடன் அணுமின் நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. அணுமின் திட்​டத்​தின் 5-வது அலகில், அணு உலை கட்​டிடத்​துக்​குள் ‘அணு உலை அழுத்​தக்கலன்’ (reactor pressure vessel) வெற்​றிகர​மாக நிறு​வப்​பட்​டுள்​ள​தாக, இந்​திய அணுசக்தி கழகம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக, சமூக வலை​தளத்​தில் அக்​கழகம் வெளி​யிட்ட பதி​வு: கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தின் 5-வது அலகில் முக்​கிய உபகரணங்​களை நிறு​வுவதற்கு அணுசக்தி ஒழுங்​கு​முறை வாரி​யம் அனு​மதி வழங்​கியது. இதை தொடர்ந்​து, அங்கு முக்​கிய அணுமின் நிலைய உபகரணங்​களை நிறு​வும் பணி முழு​வீச்​சில் நடை​பெறுகிறது.

அதன்​படி இந்த அணுஉலை கட்​டிடத்​துக்​குள் ‘அணு உலை அழுத்​தக் கலன்’ வெற்​றிகர​மாக நிறு​வப்​பட்​டுள்​ளது. இது, 320 டன் எடை கொண்​ட​தாகும். இதன்​மூலம் இந்​திய அணுசக்தி கழகம் மிக முக்​கிய மைல்​கல்லை எட்​டி​யுள்​ளது. இது இந்​தி​யா​வின் பொறி​யியல் திறமைக்கு முக்​கிய சான்​றாகும். இந்​தச் சாதனை, அணு நீராவி விநி​யோக அமைப்பு உபகரணங்​களை நிறு​வும் பணி​யின் தொடக்​கம் ஆகும். இந்​திய அணுசக்​திக் கழகம் மற்​றும் ரஷ்​யா​வின் ஏஎஸ்இ அமைப்பு இடையே வலு​வான ஒத்​துழைப்பு நீடிக்​கிறது. கூடங்​குளம் அணு மின் நிலை​யம் முழு​மை​யாக செயல்​படும்​போது 6,000 மெகா​வாட் மின்​ உற்​பத்தி செய்​யப்படும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here