டிஎன்பிஎல் 10-வது சீசனுக்காக 103 வீரர்கள் தக்கவைப்பு

0
24

10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 23 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜூலை 3-ல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபிஷேக் தன்வர், ஸ்வப்னில் சிங், ஜெகதீசன், மொகித் ஹரிகரன், லோகேஷ் ராஜ், சிலம்பரசன், ஆஷிக், பிரேம்குமார், தினேஷ் ராஜ், ராஜலிங்கம், சுனில் கிருஷ்ணா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் 9 வீரர்களை விடுவித்துள்ளது. நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணி கேப்டன் சாய் கிஷோர், இசக்கிமுத்து உள்ளிட்ட 14 வீரர்களை தக்கவைத்துள்ளது.

திருச்சி கிராண்ட் சோழாஸ் வாஷிங்டன் சுந்தர், கவுசிக் உள்ளிட்ட 13 வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் உள்ளிட்ட 12 வீரர்களையும், கோவை கிங்ஸ் ஷாருக்கான், சாய் சுதர்சன் உள்ளிட்ட 11 வீரர்களையும், நெல்லை ராயல் கிங்ஸ் சோனு யாதவ், ஆதிஷ் உள்ளிட்ட 15 வீரர்களையும், மதுரை பாந்தர்ஸ் கார்த்திக், அனிருத், குர்ஜப்னீத் சிங் உள்ளிட்ட 11 வீரர்களையும், சேலம் ஸ்பார்டன்ஸ் நித்திஷ் ராஜகோபால், ஹரி நிஷாந்த் உளிட்ட 16 வீரர்களையும் தக்கவைத்துள்ளன.

ஒட்டுமொத்தமாக 8 அணிகளும் சேர்த்து 103 வீரர்களை தக்கவைத்துள்ளன. அதேவேளையில் 56 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட மற்றும் புதிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயர்களை டிஎன்பிஎல் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளங்களில் வருகிற 25-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என டிஎன்சிஏ செயலாளர் பகவன்தாஸ் ராவ் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here