சினிமா விழா​வில் ரசிகர்​கள் அத்​து​மீறல்: ராஷ்மிகாவை பாதுகாத்த கீர்த்தி சனோன்

0
22

ராஷ்மிகா மந்​த​னா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் நடித்​துள்ள ‘காக்​டெய்ல் 2’ என்ற இந்தி திரைப்​படம், ஜூன் 19ம் தேதி வெளியாகிறது. ஹோமி அடஜானியா இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி புனே-​வில் உள்ள வணி​கவளாகம் ஒன்​றில் நடை​பெற்​றது. இதற்​காக ராஷ்மிகா மந்​த​னா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் ஆகியோர் அங்கு சென்​றனர்.

இவர்​களைக் கண்​டதும் ரசிகர்​கள் பாது​காப்பு தடுப்​பு​களை உடைத்​துக் கொண்டு முண்டியடித்​த​தால் அந்த இடம் பரபரப்பானது. பாது​காப்​புக் காரணங்​களால் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்​துச் செய்​யப்​பட்​டது. கூட்ட நெரிசலில் இருந்து பாது​ காவலர்​கள் உதவியோடு ஷாகித் கபூர் கோபத்​துடன் வெளியேறி​னார், கூட்ட நெரிசலுக்கு நடு​வே, கீர்த்தி சனோன், ராஷ்மிகா சிக்​கிக்​கொண்​டனர். உடனடி​யாக ராஷ்மிகா மந்தனாவைத் தன்கைகளால் அரவணைத்​துப் பாது​காத்​தார் கீர்த்தி.

நெருங்கி வந்த ரசிகர்​களைப் பாது​காவலர்​கள் தடுத்​து, அவர்களை வெளியே பாது​காப்​பாக அழைத்​துச் சென்​றனர். நெரிசலில் இருந்து ராஷ்மி​காவை, சகோ​தரி போல கீர்த்தி பாதுகாப்​பாக அழைத்​துச் செல்​லும் வீடியோ சமூக வலை​தளங்களில் வேக​மாகப் பரவியது. கீர்த்தி சனோனின் இந்த பாதுகாப்பு உணர்வை சமூக வலை​தளங்​களில் பாராட்டி வருகின்றனர். அதோடு நிகழ்ச்சி ஏற்​பட்​டாளர்​களைக் கடுமையாக விமர்​சித்து வரு​கின்​றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here