ஆளுநர் உரை நிகழ்வு குறித்து ஆலோசிக்க ஸ்டாலின் தலைமையில் ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

0
25

தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத் ​தொடர் ஆளுநர் உரை​யுடன் ஜூன் 18-ல் தொடங்க உள்ள நிலை​யில், திமுக எம்​எல்​ஏக்​கள் ஆலோ​னைக் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யில் 17-ம் தேதி நடை​பெற உள்​ளது.

தமிழகத்​தில் தவெக அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்​பேற்​றது. அதைத் தொடர்ந்​து, தவெக அரசு மீது நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்​து​வதற்​காக மே 13 ம் தேதி சட்​டப்​பேரவை கூடியது. வாக்​கெடுப்​பில் தவெக அரசு வெற்றி பெற்​றது.

இந்த சூழலில், தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் ஆளுநர் உரை​யுடன் ஜூன் 18-ம் தேதி தொடங்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டது. பேர​வை​யில் உரை நிகழ்த்த வரு​மாறு ஆளுநர் ஆர்​.​ வி.அர்​லேகரை சந்​தித்து சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி. பிர​பாகர் அழைப்பு விடுத்​தார்.

அந்த வகை​யில், 18-ம் தேதி சட்​டப்​பேரவை கூடு​கிறது. அன்று ஆளுநர் அர்​லேகர் உரை​யாற்​றுகிறார். மறு​நாள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது பேரவை உறுப்​பினர்​கள் பேசு​வார்​கள்.

இந்​நிலை​யில், ஆளுநர் உரைமீதான விவாதத்​தில் பேசுவது குறித்து திமுக எம்​எல்​ஏக்​களுக்கு ஆலோ​சனை வழங்​கும் கூட்​டம் கட்​சித் தலை​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் 17-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இதுகுறித்து திமுக கொறடா எ.வ.வேலு நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில், `‘தி​முக தலை​வர் ஸ்டா​லின் தலை​மை​யில், திமுக சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் கூட்​டம் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் உள்ள கலைஞர் அரங்​கில் ஜூன் 17-ம் தேதி மாலை 6 மணி அளவில் நடை​பெறும்.

ஆளுநர் உரை தொடர்​பாக நடை​பெறும் இந்த கூட்​டத்​தில் திமுக சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் அனை​வரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்​டும்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

பேர​வை​யில் ஆளுநர் உரை நிகழ்த்​தும்​போது திமுக எம்​எல்​ஏக்​கள் எவ்​வாறு நடந்​து​கொள்ள வேண்​டும், எந்​தெந்த உறுப்​பினர்​கள் பேச வேண்​டும் என்​பது தொடர்​பாக இந்த கூட்​டத்​தில் உறுப்​பினர்​களுக்கு முக்​கிய அறி​வுரைகள், ஆலோ​சனை​கள் வழங்​கப்​படும் என்று தி​முக நிர்​வாகி​கள்​ தெரி​வித்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here