கிள்ளியூர் பேரூராட்சி தலைவியும் திமுகவைச் சேர்ந்தவருமான ஷீலா, அவரது கணவர் பேரூர் திமுக செயலாளர் சத்தியராஜ் மற்றும் 9 கவுன்சிலர்கள், 200க்கும் மேற்பட்ட திமுகவினருடன் நேற்று மாலை தவெக கட்சியில் இணைந்தார். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், கிள்ளியூரை தவெக கோட்டையாக மாற்றுவோம் என அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.















