ஏர் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் – ரூ.1,601 கோடிக்கு வாங்கியது மகாராஷ்டிர மாநில அரசு

0
21

தெற்கு மும்பை​யின் வரலாற்று அடை​யாளங்​களில் ஒன்றாகத் திகழும் புகழ்​பெற்ற ‘ஏர் இந்தியா’ பலமாடிக் கட்டடத்தை, மகாராஷ்டிர மாநில அரசு ரூ.1,601 கோடிக்கு முறைப்​படி வாங்​கி​யுள்​ளது.

மகா​ராஷ்டிர மாநிலத் தலை​மைச் செயல​க​மான மந்த்ராலயாவில் செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்ற அமைச்சரவைக் கூட்​டத்​திற்​குப் பிறகு, முதல்​வர் தேவேந்​திர பட்னா​விஸ் முன்​னிலை​யில் இதற்​கான ஒப்​பந்​தப் பரி​மாறிக் கொள்​ளப்​பட்​டது. ஏர் இந்​தியா அஸெட்ஸ் ஹோல்​டிங் நிறு​வனம் (ஏஐஏஹெச்​எல்) மற்​றும் மாநிலப் பொதுப்​பணித் துறை அதிகாரிகள் இதில் கையெழுத்​திட்​ட​தாக அரசுத் தரப்பு அதிகாரப்பூர்வ செய்​திக்​குறிப்பு தெரிவிக்​கிறது.

தெற்கு மும்​பை​யின் நரிமன் பாயிண்ட் பகு​தி​யில், கடலை நோக்கிய​வாறு அமைந்​துள்ள இந்த 23 மாடி வணி​கக் கட்​டிடம், மாநில அரசுக்​குச் சொந்​த​மான நிலத்​தில் கடந்த 1974-ம் ஆண்டு கட்​டப்​பட்​டது. ஆரம்ப கால​கட்​டங்​களில் இதன் அதிநவீன மின்தூக்கி​களில் பயணிப்​ப​தற்​காகவே பொது​மக்​கள் அதிக அளவில் திரண்​டனர். வரலாற்​றுச் சிறப்​புமிக்க மும்​பை​யின் முக்கிய அடை​யாள​மாக இக்​கட்​டிடம் விளங்கி வரு​கிறது.

ஏர் இந்​தியா நிறு​வனம் தனி​யார்​மய​மாக்​கப்​பட்​டு, அதனை டாடா குழு​மம் வாங்​கிய பிறகு, நிறு​வனத்​தின் முதன்மை அல்​லாத சொத்துக்​கள் அனைத்​தும் மத்​திய அரசின் ஏர் இந்​தியா அஸெட்ஸ் ஹோல்​டிங் லிமிடெட் அமைப்​பின் வசம் ஒப்​படைக்​கப்​பட்டன என்பது குறிப்​பிடத்​தக்​கது.

தெற்கு மும்​பை​யில் உள்ள தலை​மைச் செயல​கத்துக்கு அரு​கில் அரசு அலு​வல​கங்​களை அமைப்​ப​தற்​குக் கடுமை​யான இடநெருக்கடி நிலவி வந்​த​தால், இந்த இடத்தை வாங்​கு​வதற்கு மகா​ராஷ்டிர அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here