தெலங்கானா தேர்தலில் போட்டி: பவன் கல்யாண் உறுதி

0
22

வரும் 2028ல் நடை​பெறும் தேர்​தலில் தெலங்கானா​வில் ஜனசேனா போட்​டி​யிடும் என்று அக்​கட்​சி​யின் தலை​வர் பவன் கல்​யாண் கூறி​னார்.

தெலங்​கானா மாநிலத்​தின் 13-வது உதய தினம் நேற்று வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. தெலங்​கானா உதய​மான நாளை கொண்​டாட ஜனசேனா கட்சி ஹைத​ரா​பாத்​தில் பொதுக்கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​தது.

ஆனால் சட்​டம் ஒழுங்கு பிரச்​சினையை காரணம் காட்டி தெலங்கானா போலீ​ஸார் இதற்கு அனு​மதி தர மறுத்துவிட்​டனர். இதற்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை அவசர மனு​வாக விசாரிக்க ஹைத​ரா​பாத் உயர் நீதி​மன்​றம் மறுத்து விட்​டது. இதனால் பொதுக் கூட்​டம் ரத்து செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஜனசேனா கட்​சி​யின் தலை​வரும் ஆந்​திர துணை முதல்​வரு​மான பவன் கல்​யாண், ஹைத​ரா​பாத்​தில் உள்ள தனது வீட்​டில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: தெலங்​கானா மாநிலம் பிரிக்​கப்​பட்​ட​போது, பிரித்த விதம் தவறு என்​று​தான் கூறினேன். பிரிக்​கப்​பட்​டது தவறல்ல. சண்டை போடா​மல் அண்ணன், தம்பி போல் பிரிந்து விடலாம் என்​று​தான் கூறினேன்.

அதற்​காக நான் தெலங்​கா​னா​வுக்கு வரக்​கூ​டா​தா ? தீவிரவாதத்தை விட மோச​மானது பிராந்​தி​ய​வாதம். அதாவது மொழி, மாநிலம் என பிரிந்து கிடப்​பது, மற்​றவர்​கள் உள்ளே வர முடியாமல் தடுப்​பது மிக கொடுமை​யானது. உங்​கள் ராகுல்​ காந்தி, பிரி​யங்கா காந்தி போன்​றோர், தென் மாநிலங்​களில் எங்கு வேண்​டு​மா​னாலும் போட்​டி​யிடலாம்.

ஆனால் நாங்​கள் இங்கு ஒரு கூட்​டம் கூட நடத்​தக்​கூ​டாது என்​பது என்ன நியா​யம் ? நான் இது​வரை தெலங்​கா​னா​வில் போட்​டி​யிட வேண்​டும் என நினைக்​க​வில்​லை. ஆனால் இப்​போது சொல்கிறேன். வரும் 2028ம் ஆண்டு தெலங்​கானா தேர்​தலில் ஜனசேனா கட்சி கண்​டிப்​பாக போட்​டி​யிடும். அது தனித்து போட்டி​யா ? அல்​லது ஆந்​திரா போல கூட்​டணி அமைத்து போட்டியா என்​பது பிறகு தெரிய​வரும்​. இவ்​வாறு பவன்​ கல்​யாண்​ கூறி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here