ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட் உயிரிழப்பு

0
13

அமெரிக்கா​வின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர். அப்​போது முதல் காதலித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜார்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்’ என்ற இடத்​தில் இவர்களது திரு​மணம் நடை​பெற்​றது. சுமார் 400 விருந்​தினர்​கள் கலந்​து​கொண்ட இந்த திரு​மணத்​தில் தேவ் பிஜி மிக​வும் மகிழ்ச்சியாகக் காணப்​பட்​டார். திருமண வரவேற்பு முடிந்​ததும், ஹனிமூன் செல்​வதற்​காக தேவ் தம்​ப​தி​யினர் ‘ராபின்​சன் ஆர்​66′ ஹெலி​காப்​டரில் ஏறினர். அப்​போது வானிலை மோச​மாக இருந்தது.

இதனால் ஒரு பைலட் என்ற முறை​யில், இப்​போது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்​டாம் என பைலட்​டிடம் தேவ் கூறி​யுள்​ளார். ஆனால், அதிக உயரத்​தில் பறக்​கலாம் என்று கூறி பைலட் ஹெலி​காப்​டரை இயக்​கி​னார். ஆனால் புறப்​பட்ட சில நிமிடங்​களி​லேயே, திரு​மணம் நடந்த இடத்​துக்கு அரு​கிலேயே உள்ள அடர்ந்த காட்​டுப் பகு​தி​யில் ஹெலி​காப்​டர் விழுந்து நொறுங்​கியது.

இந்த விபத்​தில் டேவ் பிஜி மற்​றும் ஹெலி​காப்​டர் பைலட் ஆகிய இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த மணமகள் ஜெஸ்னி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அவரது உடல்​நிலை சீராக உள்​ளது. இதுகுறித்து தேசிய போக்​கு​வரத்து பாது​காப்பு வாரி​யம் வி​சா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here