ரூ.300 கோடியை கடந்தது சூர்யாவின் ‘கருப்பு’ வசூல்

0
26

சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம்,‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ.300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை பட்டியலில் இணைந்துள்ளது. இதன் மூலம் சூர்யா நடித்த படங்களில் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்த முதல் படமாக ‘கருப்பு’ அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக வசூல் ரீதியாக பெரிய வெற்றி கிடைக்காமலிருந்த சூர்யாவுக்கு இப்படம் கைகொடுத்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here