கடியப்பட்டணம்: தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

0
45

கடியப்பட்டணம் குழந்தை இயேசு காலனியில் வசிக்கும் மீனவர் சுரேன் என்பவரின் ஒரு வயது மகள் ஹெலைனா, நேற்று (மே 30) வீட்டில் குளியலறையில் தண்ணீர் நிரம்பிய வாளியில் தலைகீழாக விழுந்து தத்தளித்த நிலையில் காணப்பட்டார். தாயார் வின்சி அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here