பயிர்க் கடனை ஏன் முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது? – நபார்டு நிபந்தனை தெரியாமல் தலையைக் கொடுத்த தவெக அரசு

0
24

தமிழகத்தில் 14.23 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வித​மாக பயிர்க் கடனில் ரூ. 2,044 கோடியை தள்​ளு​படி செய்​திருக்​கிறது தவெக அரசு. ஆனால், தேர்​தல் வாக்​குறு​தி​யில் சொன்​னபடி விஜய் செய்​ய​வில்​லையே என விவ​சா​யிகளும் விவ​சாய சங்​கங்​களும் போர்க்​கொடி தூக்கி இருக்​கின்​றன.

பயிர்க் கடன் தள்​ளு​படி என்​பது திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கும் ஓட்டுக்​காக விவ​சா​யிகளை வளைக்​கும் ஒரு உத்​தி. அதேசம​யம், இந்த ‘தள்​ளு​படி’ விவ​காரத்​துக்கு நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. விவ​சா​யிகளுக்கு கடன் வழங்​கும் தொடக்க வேளாண்​மைக் கூட்​டுறவு கடன் சங்​கங்​கள் இந்​தியா முழு​வதும் சுமார் ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மாக இருக்​கின்​றன.

இதில்​லாமல், சுமார் 900 மாவட்ட மத்​திய கூட்​டுறவு வங்​கி​கள் இருக்​கின்​றன. தமிழகத்​தில் சுமார் 4 ஆயிரம் கடன் சங்​கங்​களும் 24 மத்​தி​யக் கூட்​டுறவு வங்​கிகளும் உள்​ளன. இவற்​றின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி வரைக்​கும் விவ​சாயக் கடன்கள் வழங்​கப்​படு​கின்​றன.

வாஜ்​பாய் ஆட்​சி​யில் கடன் சங்​கங்​களும் மத்​திய கூட்​டுறவு வங்கிகளும் கடும் நிதி நெருக்​கடி​யில் தத்​தளித்​தன. அடுத்து வந்த காங்​கிரஸ் ஆட்​சி​யில் வைத்​தி​ய​நாதன் கமிட்டி அளித்த சிபாரிசின் படி சுமார் 13 ஆயிரம் கோடியை வங்கி மறுசீரமைப்பு நிதி​யாக மத்​திய அரசு அளித்​தது. (இதில் சுமார் 1,000 கோடி தமிழகத்​துக்​கான நிதி). ஆனால், இந்த நிதியை பெறவேண்​டு​மா​னால் மாநில அரசுகள் நபார்டு வங்​கி​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​திட வேண்​டும் என நிபந்​தனை விதிக்​கப்​பட்​டது.

வங்கி நிர்​வாகத்​தில் அரசி​யல்​வா​தி​களின் தலை​யீடு, கடன் தள்​ளு​படி உள்​ளிட்ட விஷ​யங்​களுக்கு செக் வைத்​த​தால் புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட மறுத்​தார் அப்​போதைய முதல்​வர் ஜெயலலி​தா. இந்த நிலை​யில் செக் ஷன் 35 (ஏ)-ன் படி சிவகங்கை மத்​தி​யக் கூட்​டுறவு வங்​கியை முடக்​கியது ரிசர்வ் பேங்க். இது தனது தொகு​திப் பிரச்​சினை என்​றாலும், “இது ரிசர்வ் பேங்க் எடுத்த நடவடிக்​கை” என்று சொல்லி ஒதுங்​கி​னார் சிதம்​பரம். இதையடுத்​து, “ரூ.19 கோடியை மாநில அரசு செலுத்​தி​னால் வங்கி மீண்​டும் செயல்​பாட்​டுக்கு வரும்” என்​றது நபார்​டு. ஆனால் ஜெயலலி​தா, ரூ.13 கோடியை மட்​டும் செலுத்த சம்​ம​தித்​தார். நபார்டு இதை ஏற்​க​வில்​லை.

இந்​தப் பஞ்​சா​யத்து ஓராண்டு காலம் இழுபட்ட நிலை​யில், ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு கருணாநிதி முதல்​வ​ரா​னார். குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் மூல​மாக சிவகங்கை விவ​காரம் கருணாநி​தி​யின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. அவர் எடுத்த முயற்​சி​யால் நிதிக்​கான உத்​தர​வாத கடிதத்தை மட்​டும் வாங்​கிக் கொண்டு சிவகங்கை மத்​திய கூட்​டுறவு வங்​கியை மீண்​டும் செயல்​பாட்​டுக்கு கொண்டு வந்​தது நபார்​டு. புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தி​லும் 2006-லேயே கருணாநிதி அரசு கையெழுத்​திட்​டது.

2006-ல் திமுக அரசு சுமார் 7 ஆயிரம் கோடிக்​கான விவ​சாயக் கடன்​களை தள்​ளு​படி செய்​தது. எந்த அளவு​கோலும் இல்​லாமல் அனை​வருக்​கும் கடன் தள்​ளு​படி ஆனதால் பண்​ணை​யார்​களும் பலனடைந்​தார்​கள். தொடர்ந்து 2016-ல் ஜெயலலி​தா​வும் ரூ.5,318.73 கோடிக்​கான விவ​சாயக் கடன்​களை தள்​ளு​படி செய்​தார். அதே​போல், எடப்​பாடி பழனி​சாமி​யும் 2021 பிப்​ர​வரி​யில் 12,110 கோடிக்​கான விவ​சாயக் கடன்​களை தள்​ளு​படி செய்து அறி​வித்​தார்.

ஆனால், அவரால் அதைச் செய்ய முடி​யாமல் போனது. அடுத்து ஆட்​சிக்கு வந்த ஸ்டா​லின் தலை​யில் அந்​தச் சுமை விடிந்​தது. 2021 மே மாதம் ரூ.12,110 கோடி பயிக்​கடனை முறைப்​படி தள்​ளு​படி செய்​தார் ஸ்டா​லின். அத்​துடன், ரூ.2,755.99 கோடிக்​கான மகளிர் சுய உதவிக் குழு கடன்​கள், சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்​கான நகைக் கடன்​கள் ஆகிய​வற்​றை​யும் ஸ்டா​லின் அரசு தள்​ளு​படி செய்​தது. ஆக, கடன் தள்​ளு​படிக்​காக மட்​டுமே கடந்த ஆட்​சி​யில் சுமார் ரூ.21 ஆயிரம் கோடியை வங்​கி​களுக்​குச் செலுத்தி இருக்​கிறது தமிழக அரசு.

விவ​சாயக் கடன் தள்​ளு​படி என்று திமுக, அதி​முக வாக்​குறுதி கொடுத்​தாலே கூட்​டுறவு வங்​கி​யாளர்​கள் மிரண்டு போவார்​கள். ஏனென்​றால், யார் ஆட்​சிக்கு வந்​தா​லும் உடனடி​யாக கடன் தள்​ளு​படி அமலுக்கு வந்​து​விடும். ஆனால், அரசிட​மிருந்து அதற்​கான தொகை உடனடி​யாக வங்​கி​களுக்கு வந்து சேராது. ஐந்​தாண்டு காலத்​துக்​கும் பல தவணை​களாக இழுத்​தடித்​துத்​தான் தரு​வார்​கள். இதனால் வங்​கி​கள் ஐந்​தாண்​டு​களுக்கு வரவேண்​டிய வட்டி நஷ்டப்​பட்டு நிற்​கும். இது​தான் கடந்த கால வரலாறு.

இதற்​கெல்​லாம் கடி​வாளம் போட​வேண்​டும் என்​ப​தற்​காகவே, ‘நபார்டு வங்​கி​யின் அனு​மதி இல்​லாமல் கடன் தள்​ளு​படியை மாநில அரசுகள் அறிவிக்​கக் கூடாது. அப்​படியே அறி​வித்​தா​லும் தள்​ளு​படி செய்​யப்​பட்ட கடனுக்​கான தொகையை அதி​கபட்​சம் 60 நாட்​களுக்​குள் முழு​மை​யாக வங்​கி​களுக்கு செலுத்​தி​விட வேண்டும்’ என்ற நிபந்​தனை​களை கடந்த ஆண்டு நவம்​பரில் அறி​வித்​தது நபார்​டு.

இது தெரிந்​திருந்​த​தால் தான், திமுக இம்​முறை விவ​சாயக் கடன் தள்​ளு​படி பக்​கமே போக​வில்​லை. நபார்​டின் லேட்​டஸ்ட் நில​வரம் தெரி​யாமல் அதி​முக-​வும் தவெக-​வும் கடன் தள்​ளு​படி அறி​விப்பை வாரி வழங்​கின. அதி​முக ஆட்​சிக்கு வராத​தால் தலை தப்​பியது. ஆட்​சியை பிடித்த தவெக, இந்​த விஷ​யத்​தில்​ ஆழம்​ தெரி​யாமல்​ ஆஃபர்​ கொடுத்​து​விட்​டோமோ என ஆழ்ந்​து யோசித்​துக்​கொண்​டிருக்​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here