கொல்கத்தாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டிய டெல்லி

0
26

ஐபிஎல் 2026 தொடரின் 70-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, தொடக்க வீரர் கேஎல் ராகுலின் அதிரடியான அரைசதம் (60 ரன்கள், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) மற்றும் அக்சர் படேலின் சிறப்பான 39 ரன்கள் ஆகியவற்றின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. 

இறுதி நேரத்தில் டேவிட் மில்லர் 28 ரன்களும், சாஹில் பராக் 24 ரன்களும் எடுத்து பலம் சேர்த்தனர். கொல்கத்தா தரப்பில் சவுரப் துபே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து 204 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்குச் சுருண்டது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கேப்டன் அஜின்கியா ரஹானே 39 பந்துகளில் 63 ரன்கள் (4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) எடுத்துப் போராடினார்.

மனிஷ் பாண்டே 25 ரன்களும், ரோவ்மன் பவல் 29 ரன்களும் எடுத்தனர். டெல்லி தரப்பில் மிரட்டலாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ் மற்றும் லுங்கி என்கிடி தலா 3 விக்கெட்டுகளைச் சரித்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தனர். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here