​போர்ச்​சுகல்​ டென்​னிஸ்​ தொடரில்​ சாம்​பியன்​: 24 வருடங்களுக்​கு பிறகு இந்​தி​ய வீராங்கனை மா​யா சாதனை

0
25

போர்ச்​சுகலில்​ உள்​ள லாகோஸ்​ நகரில்​ மகளிருக்​கான டபிள்​யூ 35 லாகோஸ்​ டென்​னிஸ்​ தொடர்​ நடை​பெற்​றது. இதில்​ ஒற்​றையர்​ பிரிவு இறு​திப்​ போட்​டி​யில்​ இந்​தி​ய வீராங்​க​னை​யான 17 வயதாகும்​ மா​யா ராஜேஷ்வரன்​ ரேவ​தி, ஸ்பெ​யினின்​ செலி​யா செர்​வினோ ரூயிஸை எதிர்த்​து விளை​யாடி​னார்​. இந்​த மோதலில்​ மா​யா 6–4, 6–2 என்​ற நேர்​ செட்​களில்​ வெற்​றி பெற்​று சாம்​பியன்​ பட்​டம்​ வென்​றார்​.

இதன்​ மூலம்​, 2004-ம்​ ஆண்​டுக்​குப்​ பிறகு தொழில்​முறை டென்​னிஸ்​ ஒற்​றையர்​ பிரி​வில்​ பட்​டம்​ வென்​ற இளம் இந்​தி​ய வீராங்​க​னை (17 வயது, 3 மாதங்​கள்​) என்​ற பெரு​மை​யைப்​ பெற்​றார்​ மா​யா.

இதற்​கு முன்​னர்​ 17 வயது 10 மாதங்​களில்​ பட்​டம்​ வென்​ற சானி​யா மிர்​ஸா வசம்​ இந்​தச்​ சாதனை இருந்தது. தற்​போது இந்​த சாதனையை மா​யா முறியடித்​துள்​ளார்​. லாகோஸ்​ தொடரில்​ மா​யா தகு​திச்​சுற்​று மூலம்​ பிர​தான சுற்​றுக்​கு முன்​னேறிய நிலை​யில்​ ஒரு செட்​டை கூட இழக்​காமல்​ அபார​மாக செயல்​பட்​டு கோப்​பையை வென்​றுள்​ளார்​.

இந்​தத்​ தொடரில்​ இரட்​டையர்​ பிரி​விலும்​ அவர்​, கோப்​பையை வென்​று அசத்​தி உள்​ளார்​. இரட்​டையர்​ பிரி​வில்​ உக்​ரைன்​ வீராங்​க​னை யெலிசவெட்​டா கோட்​லி​யாருடன்​ இணைந்​து மா​யா சாம்​பியன்​ பட்​டம்​ வென்​றார்​. இந்​த ஜோடி இறு​திப்​ போட்​டி​யில்​ 0-6, 6-2 (10-7) என்​ற செட்​ கணக்​கில்​ சீனா​வின்​ மின்​ லியு, இத்​தாலி​யின்​ கார்​லோட்​டா மோசி​யா ஜோடியை வீழ்த்​தி​யது.

மா​யா ராஜேஸ்​வரன்​ ரேவ​தி தமிழகத்​தின்​ கோவை​ மாவட்டம் காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர்​. மா​யா என்​பது​தான்​ அவரது பெயர்​. ராஜேஸ்​வரன்​ – ரேவ​தி என்​பது அவரது பெற்​றோர்​ பெயர்​. தன்​ பெயருடன்​ பெற்​றோர்​ பெயரை​யும்​ சேர்த்​து அதனை​யும்​ தன்​ பெய​ராக அடை​யாளப்​படுத்​தி​யுள்​ளார்​. தற்​போது சானி​யா மிர்​ஸா​வின்​ சாதனையை முறியடித்​துள்​ளதன்​ மூலம்​ இந்​தி​ய டென்​னிஸ்​ வரலாற்​றில்​ புதி​ய அத்​தி​யா​யத்​தைத்​ தொடங்​கி உள்​ளார்​ இளம்​ புய​லான மா​யா.

போர்ச்​சுகல்​ போட்​டி வெற்​றிக்​கு பின்​னர்​ மா​யா ராஜேஷ்வரன்​ ரேவ​தி கூறிய​தாவது:

இது எனது முதல்​ பட்​டம்​ என்​ப​தால்​, எனது பயணத்​தின்​ தொடக்​க​மாகவே இதை பார்க்​கிறேன்​. தொழில்​முறை டென்​னிஸ்​ வாழ்க்​கை​யைத்​ தொடங்​கு​வதற்​கு இது ஒரு நல்​ல அறிகுறி.

இந்​த வெற்​றி மிகப்​பெரிய மாற்​றத்​தை ஏற்​படுத்​தி​விடும்​ என்​று நான்​ நினைக்​க​வில்​லை. இது ஆரம்​பம்​தான்​. ஆனால்​, என்​னால்​ இன்​னும்​ சிறப்​பாகப்​ போட்​டி​யிட முடி​யும்​ என்​ற நம்​பிக்​கை​யை இந்​த வெற்​றி எனக்​கு அளித்​துள்​ளது.

மகளிர்​ தரவரிசை​யில்​ குறிப்​பிடத்​தக்​க முன்​னேற்​றத்​தை அடைவ​தே எனது இலக்​கு. நான்​ என்​மீது அதி​க நம்​பிக்​கை வைக்​க வேண்​டும்​. இன்​னும்​ தன்​னம்​பிக்​கை​யுடன்​ செயல்​பட வேண்​டும்​. ஒரு குறிப்​பிட்​ட தரத்​தில்​ சிறப்​பாக விளை​யாடிய பிறகு, அடுத்​த முறை களமிறங்​கும்​போதும்​ என்​னால்​ அதைச்​ செய்​ய முடி​யும்​, இன்​னும்​ சிறப்​பாக விளை​யாட முடி​யும்​ என்​ற நம்​பிக்​கை எனக்​குள்​ இருக்​க வேண்​டும்​.

நான்​ அதி​க​மான போட்​டிகளில்​ பங்​கேற்​க விரும்​பு​கிறேன்​. அதே நேரத்​தில்​, சில காலம்​ பயிற்​சி​யில்​ கவனம்​ செலுத்​த​வும்​ திட்​ட​மிட்​டுள்​ளேன்​. தொழில்​நுட்​ப ரீதி​யாக சில மாற்​றங்​களைக்​ கொண்​டு​வர வேண்​டும்​. உடல்​ரீ​தி​யாக வலிமை​யை அதி​கரிக்​க வேண்​டும்​. கா​யங்​களைத்​ தவிர்த்​து, மைதானத்​தில்​ சுறுசுறுப்​பாகச்​ செயல்​பட வேண்​டும்​. எனவே, அடுத்​த சில மாதங்​களில்​ உடற்​தகு​தி​யை மேம்​படுத்​து​வ​தில்​ அதி​க கவனம்​ செலுத்​து​வேன்​.

சானி​யா மிர்​ஸாவை யா​ராலும்​ மிஞ்​சி​விட முடி​யாது என்​று நினைக்​கிறேன்​. அவர்​ ஒரு ஜாம்​ப​வான்​, எப்​போதும்​ ஜாம்​ப​வா​னாகவே இருப்​பார்​. பல விஷ​யங்​களில்​ நான்​ அவரைப்​ பார்த்​து ஊக்​கம்​ பெறுகிறேன்​. நான்​ வளர்ந்​து வந்​த காலத்​தில்​ எனக்​கு முன்​மா​தி​யாக இருந்​தார்​. பல ஆண்​டு​களுக்​குப்​ பிறகு இந்​தி​யா​வில்​ டென்​னிஸ்​ விளை​யாட்​டை மக்​கள்​ மத்​தி​யில்​ அதி​கம்​ அறியச்​ செய்​தவர்​ அவர்​.

லாகோஸ்​ போட்​டி​யில்​ நான்​ வெற்​றி பெறு​வேன்​ என்​ற எதிர்​பார்ப்​புடன்​ வரவில்​லை. என்​னால்​ முடிந்​த அளவுக்​கு சிறப்​பாக விளை​யாட வேண்​டும்​ என்​ற எண்​ணத்​துடன்​ களமிறங்​கினேன்​. இந்​தப்​ போட்​டி​யில்​ குறைந்​த வாய்ப்​புள்​ள வீராங்​க​னை​யாகவே நான்​ கருதப்​பட்​டேன்​. ஆனால்​, எனது எதி​ராளி​களை​விடச்​ சிறப்​பான டென்​னிஸ்​ ஆட்​டத்​தை வெளிப்​படுத்​தினேன்​.

நெருக்​கடி​யான தருணங்​களி​லும்​ ஆட்​டத்​தின்​ மீது அதி​க நம்​பிக்​கை வைக்​க வேண்​டும்​ என்​ப​தை இந்​தப்​ போட்​டி​யின்​ மூலம்​ கற்​றுக்​கொண்​டேன்​. இவ்​வாறு மா​யா ராஜேஷ்வரன்​ ரேவ​தி கூறி​னார்​.

‘ந​டால்​ அகாட​மி​யில்​ இல்​லை’

தனது பயிற்​சி மையத்​தை மா​யா மாற்​றி உள்​ளார்​. ஸ்பெ​யினில்​ உள்​ள ரஃபேல்​ நடா​லின்​ டென்​னிஸ்​ அகாட​மியி​லிருந்​து சுமார்​ ஒரு மாதத்​துக்​கு முன்​பு வெளி​யேறிய மா​யா, பிரான்​ஸின்​ தெற்​குப்​ பகு​தி​யில்​ உள்​ள எலைட்​ டென்​னிஸ்​ சென்​டரில்​ இணைந்​தார்​. அந்​த மையத்​தின்​ நிறு​வனரும்​ தலை​மைப்​ பயிற்​சி​யாள​ரு​மான ஜீன்​-ரெனே லிஸ்​னார்​டின்​ வழி​காட்​டு​தலின்​படியே லாகோஸ்​ போட்​டி​யில்​ மா​யா விளை​யாடி​னார்​.

நடால்​ அகாட​மியி​லிருந்​து வெளி​யேறியது குறித்து மா​யா கூறும்​போது, “எனது எதிர்​காலத்​துக்​கு எது சிறந்​த​தாக இருக்​கும்​ என்​ப​தைப்​ பற்​றி பல்​வேறு விஷ​யங்​களை ஆலோ​சித்​தோம்​. எலைட்​ டென்​னிஸ்​ சென்​டர்​தான்​ எனக்​கு மிக​வும்​ பொருத்​த​மான தேர்​வாக இருக்​கும்​ என்​று முடிவு செய்​தோம்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here