ராஜஸ்தான் அணி வென்றால் சிஎஸ்​கேவுக்கு சிக்​கல்: பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறப் போகும் 4-வது அணி எது?

0
20

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் நடைபெற்ற லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்​றது. இந்த வெற்றியால் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேறு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.

நேற்று முன்​தினம் இரவு ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ராஜஸ்தான் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ அணியை வீழ்த்​தி​யது. இதையடுத்து புள்​ளி​கள் பட்​டியலில் ராஜஸ்தான் அணி 14 புள்​ளி​களைப் பெற்று 4-வது இடத்​துக்கு முன்னேறி​யுள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்கு ஏற்​கெனவே பெங்களூரு, ஹைத​ரா​பாத், குஜ​ராத் அணி​கள் முன்​னேறி விட்​டன.

தற்​போது ராஜஸ்​தான் வெற்றி பெற்று 14 புள்​ளி​களு​டன் முன்னேறி​யுள்​ள​தால் பஞ்​சாப் கிங்​ஸ், கொல்​கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்​பர் கிங்​ஸ், டெல்லி அணி​கள் முன்னேறுவதில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. பிளே ஆஃப் சுற்​றில் மீதியிருக்​கும் ஒரேயொரு இடத்​துக்கு ராஜஸ்​தான், பஞ்​சாப், கொல்​கத்​தா, டெல்​லி, சிஎஸ்கே ஆகிய 5 அணி​கள் மோதுகின்​றன. எந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறவுள்​ளது என்​ப​தைப் பார்க்​கும்​போது ராஜஸ்​தானுக்கு அதிக வாய்ப்​புள்​ள​தாகத் தெரியவந்​துள்​ளது.

ராஜஸ்​தான் அணிக்கு இன்​னும் ஒரு ஆட்​டம் பாக்​கி​யுள்​ளது. அந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் வெற்றி பெற்​று​விட்​டால் 16 புள்​ளி​களு​டன் பிளே ஆஃப் சுற்​றுக்கு எளி​தாக முன்​னேறி​விடும். ஒரு​வேளை தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி தோல்வி கண்டால், மற்ற அணி​களின் வெற்​றி, தோல்விக்​காகக் காத்திருக்கவேண்​டும். இதே​போல் கொல்​கத்தா அணிக்கு இன்னும் 2 ஆட்​டங்​கள் எஞ்​சி​யுள்​ளன. ஒரு வேளை கொல்​கத்தா அணி 2 போட்​டிகளில் வெற்றி பெற்​றால் 15 புள்​ளி​களைபெறும். ஆனாலும், மற்ற அணி​களின் வெற்றி தோல்விக்​காக காத்திருக்கும் நிலை ஏற்​படும்.

ஒரு​வேளை கொல்​கத்தா ஒரு போட்​டி​யில் தோல்வி கண்​டால் கூட அந்த அணி போட்​டியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும். கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணி தங்​களின் மீத​முள்ள ஆட்​டங்​களில் ஒன்​றில் தோல்வி கண்​டாலோ, சென்னை சூப்​பர் கிங்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் ஆகிய அணி​கள் தங்​களது கடைசி ஆட்​டத்​தில் தோல்வி கண்டாலோ, ராஜஸ்​தான் அணி பிளே ஆஃப் சுற்​றுக்​குள் சென்றுவிடும். அதே​நேரத்தில் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் தனது கடைசி 2 போட்​டிகளில் வென்​றாலோ அல்​லது பஞ்​சாப் கிங்ஸ் தங்களின் மீத​முள்ள ஆட்​டத்​தில் வென்​றாலோ, ராஜஸ்​தான் ராயல்ஸ் வெளி​யேற்​றப்​பட்டு விடும்.

பஞ்​சாப் கிங்ஸ் மற்​றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் தங்​களின் ஆட்​டங்​களில் தோற்​று, சென்னை சூப்​பர் கிங்ஸ் தங்களின் கடைசி ஆட்​டத்​தில் வென்​றால், ராஜஸ்​தான் ராயல்ஸ் மற்​றும் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகளைப்பெற்று சமநிலை​யில் இருக்​கும். அப்​போது நிகர ரன் விகித (என்​ஆர்​ஆர்) அடிப்​படை​யில் எந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு செல்​லும் என்​பது முடிவு செய்​யப்​படும். எப்​படி இருந்தாலும், சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் போட்​டி​யில் வெற்றி பெற்​றால்​ மட்​டுமே இந்​த நிலை. ஒரு​வேளை சிஎஸ்​கே அணி தனது கடைசி லீக்​ ஆட்​டத்​தில்​ தோல்​வி கண்​டால்​ அந்​த அணி போட்​டியிலிருந்​து வெளியேற்​றப்​படும்​ என்​பதே உண்​மை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here