ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும்: உரிமையாளர்கள் வலியுறுத்தல்

0
26

ஆம்னி பேருந்​துகளுக்​கான சாலை வரியை குறைக்க வேண்​டும் என, உரிமை​யாளர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் சங்​கத்​தின் தலை​வர் அன்​பழகன், முக்​கிய நிர்​வாகி​கள் மற்​றும் அனைத்து செயற்​குழு உறுப்​பினர்​களும் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

சென்னை மாநகரின் மையப்​பகு​தி​யில், மிகப்​பெரிய ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​ய​மான கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை மீண்​டும் ஒரு பகு​தி​யாகவோ அல்​லது முழு​மை​யாகவோ செயல்​படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழகத்​தில் வாக​னங்​களை நேரடி​யாக கண்​காணிக்​கும் சாதனங்​கள் மற்​றும் அங்​கீகரிக்​கப்​பட்ட ஸ்டிக்​கர் ஆகியவை அதிக விலைக்கு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. அரசு தலை​யிட்டு முறை​கேடு​களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அண்டை மாநிலங்​களில் பதிவு செய்​யப்​பட்​டு, ஆல் இந்​தியா டூரிஸ்ட் பெர்​மிட் பெற்​று, மத்​திய அரசின் விதி​முறை​களின்​படி, வரி செலுத்தி தமிழகத்​துக்கு இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகள், நடை​முறை​யில் மீண்​டும் தனி​யாக மாநில சாலை வரி செலுத்த வேண்​டிய அவசி​யம் இல்​லை.

எனவே, இந்த பெர்​மிட் உள்ள அண்டை மாநில பேருந்​துகளை வழக்​கம்​போல் தங்கு தடை இன்றி நமது மாநிலத்​துக்​குள் வந்து செல்​ல​வும், தமிழகப் பேருந்​துகள் வெளி​மாநிலங்​களுக்கு சென்று வரவும் வழி​வகை செய்ய வேண்​டும்.

தமிழகத்​தில் போக்​கு​வரத்து துறை​யின் பல்​வேறு சேவை​கள், குறிப்​பாக, புதிய வாகன பதிவு, அனு​மதி மற்​றும் தொடர்​புடைய நிர்​வாக செயல்​முறை​கள், அண்டை மாநிலங்​களு​டன் ஒப்​பிடும்​போது அதிக கால​தாமதம் ஆகிறது. அரசு இதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்​தில் நகரங்​களுக்கு இடையே இயக்​கப்​படும் ஆம்னி பேருந்​துகளுக்கு விதிக்​கப்​படும் சாலை வரி, அண்டை மாநிலங்​களு​டன் ஒப்​பிடும்​போது அதி​க​மாக உள்​ளது.

தமிழகத்​தில் ஆம்னி பேருந்​துகளுக்கு விதிக்​கப்​படும் சாலை வரியை மறு​பரிசீலனை செய்​து, குறைக்​கும் வகை​யில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் ஆகிய தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here