ஈரானின் திருத்தப்பட்ட அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் பகிர்ந்தது பாகிஸ்தான்

0
17

மேற்கு ஆசியா​வில் நடந்து வரும் போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமை​தித் திட்​டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போது தற்​காலிகப் போர்​நிறுத்​தம் அமலில் உள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே முக்​கிய தூத​ராகச் செயல்​பட்டு வரும் பாகிஸ்​தான் மூல​மாக இந்​தத் திட்​டம் பகிரப்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் அரசு வட்​டாரங்​களை மேற்​கோள் காட்டி ராய்ட்​டர்ஸ் செய்தி நிறு​வனம் திங்​கள்​கிழமை தெரி​வித்​துள்​ளது.

போரை முடிவுக்​குக் கொண்டு வர ஈரான் விருப்​பம் தெரி​வித்​துள்ள நிலை​யில், அமெரிக்கா அனுப்​பிய புதிய அமை​தித் திட்​டத்​திற்கு ஈரான் பதிலளித்​துள்​ளது. அமெரிக்​கா​வின் கோரிக்​கைகள் மிக அதி​க​மாக இருப்​ப​தாக ஈரானிய ஊடகங்​கள் தெரி​வித்த போதி​லும், இரு தரப்​பும் தொடர்ந்து தகவல்​களைப் பரி​மாறி வரு​வ​தாகக் கூறப்​படு​கிறது. அமெரிக்கா விதித்​துள்ள நிபந்​தனை​களில், ஈரானுக்கு போர்க்​கால இழப்​பீடு எது​வும் வழங்​கப்பட மாட்​டாது மற்​றும் அந்​நாடு ஒரே ஒரு அணுசக்தி நிலை​யத்தை மட்​டுமே கொண்​டிருக்க அனு​ம​திக்​கப்​படும் என்​பவை அதில் முக்​கிய​மானது என்று ஈரானின் பார்ஸ் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதற்​கிடை​யில், கடந்த ஞாயிறன்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்​குக் கடுமை​யான எச்​சரிக்கை ஒன்றை விடுத்​திருந்​தார். ‘‘ஈரானுக்​குக் காலம் கடந்து கொண்​டிருக்​கிறது. அவர்​கள் வேக​மாகச் செயல்​படு​வது நல்​லது, இல்​லை​யெனில் அவர்​களுக்கு எது​வுமே எஞ்​சி​யிருக்​காது. நேரம் மிக​வும் முக்​கிய​மானது!’’ என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்​தில் பதி​விட்​டிருந்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here