ஈரானின் ட்ரோன் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக் அணு மின் நிலையத்தில் தீ

0
13

ட்ரோன் தாக்​குதல் காரண​மாக ஐக்​கிய அரபு அமீரகத்தின் அணு மின் நிலை​யத்​தில் தீப்​பற்​றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்​பட​வில்​லை. கதிர்​வீச்சு பாதிப்​பும் ஏற்படவில்​லை.

ஈரான் மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்​தி​ய ​போது ஐக்​கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட வளை​குடா நாடு​களில் உள்ள எண்​ணெய் கிடங்​கு​கள் மற்​றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறி​வைத்து ஈரான் ட்ரோன் மற்​றும் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், நாங்கள் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் பகிரங்கமாகவே எச்சரித்தது.

தற்​போது சண்டை நிறுத்​தம் அறி​வித்து ஈரானுடன் அணு ஆயுததடை ஒப்​பந்​தம் தொடர்​பாக அமெரிக்கா பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. ஹார்​முஸ் ஜல சந்​தியை அமெரிக்கா முற்றுகையிட்​டுள்​ளது. ஈரானும் ஹார்​முஸ் ஜல சந்​தி​யில் கப்​பல் போக்​கு​வரத்தை அனு​ம​திக்​க​வில்​லை. இதன் காரண​மாக ஐக்​கிய அரபு அமீரகம் ஹார்​முஸ் ஜலசந்​தியை பயன்​படுத்​தாமல் குழாய் மூல​மாக கச்சா எண்​ணெய் ஏற்​றும​தியை இரு மடங்​காக அதிகரிப்​ப​தற்​கான பணி​களில் ஈடு​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் அபு​தாபி​யின் அல் தப்ரா பாலை​வனப் பகு​தி​யில் அமைந்​துள்ள பராக் அணு மின் நிலை​யம் மீது நேற்று ட்ரோன் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் அணுமின் நிலைய வளாகத்​தின் ஜெனரேட்​டர் அறை​யில் தீப்​பற்​றியது. இதில் யாரும் காயம் அடைய​வில்​லை. கதிரியக்க பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. இங்​குள்ள 4 அணு உலைகள் சீராக இயங்கி வரு​கின்​றன. இந்த தாக்​குதலை நடத்​தி​யது யார் என்பது இன்​னும் உறுதி செய்​யப்​பட​வில்​லை. ஈரான் இந்த தாக்​குதலை நடத்​தி​யிருக்​கலாம்​ என சந்தேகிக்கப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here