சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு: ஈரான் போர் குறித்து தீவிர ஆலோசனை

0
14

அரசு ​முறைப் பயண​மாக சீனா சென்​றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்​நாட்டு அதிபர் ஜி ஜின்​பிங்​குடன் நேற்று வரலாற்​றுச் சிறப்​புமிக்க பேச்​சு​வார்த்​தைகளைத் தொடங்கி​னார்.

ஏறக்​குறைய 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு அமெரிக்க அதிபர் ஒரு​வர் சீனா​வுக்​குப் பயணம் மேற்​கொள்​வது இதுவே முதல்​முறை​. முன்னதாக, 2017-ம் ஆண்டு டிரம்ப் தனது முதல் பதவிக்​ காலத்​தில் பெய்​ஜிங் சென்​றிருந்​தார்.

பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ஜின்​பிங் உடனான சந்​திப்​பின் ​போது டிரம்ப் பேசுகை​யில், “ஜி ஜின்​பிங் ஒரு சிறந்த தலை​வர். கடந்த காலங்​களில் நமக்​கிடையே ஒரு சில கருத்து வேறு​பாடு​கள் இருந்த ​போ​தி​லும், அவற்றை நாம் சுமுக​மாகத் தீர்த்​துக் கொண்டோம். அமெரிக்கா – சீனா இடையே முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் மிகச்​சிறந்த உறவு இனிவரும் காலங்​களில் அமை​யும். நாம் இணைந்து ஒரு அற்​புத​மான எதிர்​காலத்தை உருவாக்​கு​வோம்” என்​றார்.

சீன அதிபர் ஜி ஜின்​பிங் கூறுகை​யில், “அமெரிக்கா​வும் சீனா​வும் பரஸ்​பரம் போட்டி நாடு​களாக இல்​லாமல், கூட்​டாளி​களாகச் செயல்பட வேண்​டும். வர்த்​தகப் போரில் எவருக்​கும் வெற்றி கிடைக்​காது. 2026-ம் ஆண்டு இரு நாட்டு உறவு​களி​ல் ஒரு புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கும் மைல்​கல் ஆண்​டாக அமை​யும்” என்று நம்​பிக்கை தெரி​வித்​தார்.

அதிபர் டிரம்​புடன் எலான் மஸ்க் (டெஸ்​லா), டிம் குக் ( ஆப்​பிள்), ஜென்​சன் ஹுவாங் (என்​விடி​யா) மற்​றும் லாரி ஃபிங்க் ( பிளாக்​ராக் ) உள்​ளிட்ட அமெரிக்​கா​வின் முன்​னணித் தொழில் அதிபர்கள் பெய்​ஜிங் சென்​றுள்​ளனர்.

“சீ​னாவை இன்​னும் ஒரு படி முன்​னேற்​றப் பாதைக்​குக் கொண்டு செல்ல, இந்​தத் திறமை​யான மனிதர்​கள் தங்​கள் மாயாஜாலத்தைப் புரிய சீனா தனது கதவு​களைத் திறந்​து​விட வேண்​டும் என்​பதே ஜி ஜின்​பிங்​கிடம் எனது முதல் கோரிக்கையாக இருக்​கும்” என்று டிரம்ப் தனது சமூக வலை​தளப் பதி​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர்ச் சூழல் மற்​றும் அதன் விளைவாக ஏற்​பட்​டுள்ள உலகளா​விய எரிசக்தி தட்​டுப்​பாடு குறித்து இந்த மாநாட்​டில் முக்​கிய​மாக விவா​திக்​கப்​பட்​டது. குறிப்பாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் நில​வும் முடக்​கத்தை முடிவுக்குக் கொண்டு வரு​வது குறித்து இருதரப்​பும் ஆலோசித்தது.

ஈரான் அணு ஆயுதங்​களை உரு​வாக்​காது என்ற உத்​தர​வாதத்​தின் அடிப்​படை​யில், அந்த ஜலசந்​தியை மீண்​டும் திறக்​கச் செய்ய சீனா எடுக்​கும் முயற்​சிகளுக்கு அமெரிக்கா முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது. சுமார் இரண்டு மணி நேரத்​திற்​கும் மேலாக நீடித்த இந்த முதல் கட்​டச் சந்​திப்​பின்​போது, தைவான் விவ​காரம் மற்​றும் வர்த்​தக வரி வி​திப்​பு​கள்​ குறித்​தும்​ வி​வா​திக்​கப்​பட்​ட​தாகத்​ தெரிகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here