75-வது ஆண்டு நிறைவை ஒட்டி குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் குடமுழுக்கு விழாவில் மோடி பங்கேற்பு

0
15

குஜ​ராத்​தின் சோம்​நாத் கோயில் குட​முழுக்கு நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று சிறப்பு பிரார்த்​தனை​களை நடத்​தி​னார்.

குஜ​ராத்​தின் கிர் சோம்​நாத் மாவட்​டத்​தில் அமைந்​துள்ள சோம்நாத் கோயில், முன்​னாள் குடியரசு தலை​வர் டாக்​டர் ராஜேந்​திர பிர​சாத், சர்​தார் படேல் உள்​ளிட்​டோ​ரால் புதுப்​பிக்​கப்​பட்டு கடந்த 1951-ம் ஆண்டு திறக்​கப்​பட்​டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை ஒட்டி சோம்​நாத் கோயி​லில் நேற்று குட​முழுக்கு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று சிறப்பு பிரார்த்​தனை​கள், வழி​பாடு​களை நடத்​தி​னார்.

கோயில் குட​முழுக்கு விழா நடை​பெற்​ற​போது ஹெலி​காப்​டர் மூலம் மலர்​கள் தூவப்​பட்​டன. மேலும் விமானப் படை​யின் சாகச நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது. பின்​னர் கோயில் அறக்​கட்​டளை அருங்​காட்​சி​யகத்தை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். அப்​போது அவர் சோம்​நாத் கோயில் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.

பின்​னர் கோயில் வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: ஒரு பக்​த​னாக சோம்​நாத் கோயிலில் பலமுறை வழி​பாடு நடத்தி உள்​ளேன். தற்​போது குடமுழுக்கு விழா​வில் பங்​கேற்​றது மிகுந்த பரவச​மாக இருக்கிறது. ஆயிரம் ஆண்​டு​களைக் கடந்​தும் சோம்​நாத் கோயில் கம்​பீர​மாக எழுந்து நிற்​கிறது.

கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தியா விடு​தலை அடைந்​தது. அப்போது சுமார் 500-க்​கும் மேற்​பட்ட சமஸ்​தானங்​களை அப்போதைய உள்​துறை அமைச்​சர் சர்​தார் படேல் ஒன்றிணைத்தார். அதோடு சோம்​நாத் கோயிலை​யும் அவர் கட்டி எழுப்​பி​னார். முன்​னாள் பிரதமர் வாஜ்​பாய் ஆட்​சிக் காலத்​தில் கடந்த 1998-ம் ஆண்டு மே.11-ம் தேதி பொக்​ரானில் அணு சக்தி சோதனை நடத்​தப்​பட்​டது. மே 13-ம் தேதி மேலும் 2 அணு சக்தி சோதனை​கள் நடத்​தப்​பட்​டன.

அப்​போது இந்​தி​யா​வின் வலிமையை உலக நாடு​களுக்கு நமது விஞ்​ஞானிகள் தெளி​வாக உணர்த்​தினர். பல்​வேறு நாடு​கள் இந்தியா மீது பொருளா​தார தடைகளை விதித்​தன. ஆனால் தடைகளைத் தாண்டி இந்​தியா அதிவேக​மாக முன்​னேறியது. எந்தவொரு உலக சக்​தி​யாலும் இந்​தி​யாவை அடிபணிய வைக்க முடி​யாது. நில​வின் தென்​துரு​வத்​தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெரு​மையை நாம் பெற்​றிருக்​கிறோம். நில​வில் நமது ரோவர் தரை​யிறங்​கிய பகு​திக்கு சிவசக்தி முனை என்று பெயர் சூட்டி உள்​ளோம்.

மஹ்மூத் கஸ்​ன​வி, அலா​வுதீன் கில்ஜி உள்​ளிட்​டோர் சோம்​நாத் கோயில் மீது தாக்​குதல் நடத்​தினர். அந்​நிய படையெடுப்பாளர்களால் இந்த கோயில் மீது பலமுறை தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அப்​போதெல்​லாம் சிவபக்​தர்​கள் கோயிலை மீண்டும், மீண்​டும் கட்டி எழுப்​பினர். நாடு சுதந்​திரம் அடைந்​த​பிறகு சர்​தார் படேல், ராஜேந்​திர பிர​சாத், கே.எம்​.​முன்ஷி உள்ளிட்டோர் சோம்​நாத் கோயிலை பிரம்​மாண்​ட​மாக கட்டி எழுப்பினர். அவர்​களை இந்த நேரத்​தில்​ நினை​வு​ கூர்​கிறேன்​. இவ்வாறு அவர்​ பேசி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here