ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

0
15

உலக நாடு​களி​லிருந்து இறக்குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடு​தல் வரி செல்​லாது என்று அமெரிக்க சர்​வ​தேச வர்த்தக நீதி​மன்​றம் தீர்ப்பளித்​துள்​ளது.

அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் கடந்த பிப்​ர​வரி மாதம் பெரும்​பாலான இறக்​கும​திப் பொருட்​களுக்கு 10 சதவீத வரியை விதித்​தது. இதை எதிர்த்து 24 மாகாணங்​களும், சில தனி​யார் நிறு​வனங்​களும் கடந்த மார்ச் மாதம் வழக்​குத் தொடர்ந்​தன. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிப​தி​கள் கொண்ட அமர்​வு, 2-1 என்ற கணக்கில் ட்ரம்ப் நிர்​வாகத்​தின் நடவடிக்கை சட்​ட​விரோத​மானது என்று தீர்ப்​பளித்​தது.

இது தொடர்​பாக 53 பக்​கங்​கள் கொண்ட தீர்ப்​பில் நீதிப​தி​கள் கூறியுள்​ள​தாவது: 1974-ம் ஆண்​டின் வர்த்​தகச் சட்​டத்​தின் 122-வது பிரிவைப் பயன்​படுத்தி இந்த வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டின் வர்த்​தகக் கொடுப்​பனவு நிலை​யில் (பேலன்ஸ் ஆப் பேமண்ட்) பெரும் பற்​றாக்​குறை நில​வும் போது மட்​டுமே, 150 நாட்​களுக்கு இத்​தகைய வரியை விதிக்க அதிபருக்கு அதி​காரம் உண்​டு. ஆனால், ட்ரம்ப் நிர்​வாகம் வர்த்​தகப் பற்​றாக்​குறையை மட்​டுமே காரண​மாகக் காட்டி இந்த வரி விதிப்பை செயல்​படுத்​தி​யுள்​ளது.

இது சட்​டப்​படி செல்​லாது. இந்த வரி விதிப்​பால் மனுதாரர்களுக்குப் பொருளா​தார ரீதி​யாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்ந்த மாகாணம் மற்​றும் இரு நிறு​வனங்​களிடம் வசூலிக்​கப்​பட்ட வரியை வட்​டி​யுடன் திரும்ப வழங்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் தங்​களது தீர்ப்​பில் கூறியுள்​ளனர்.

ட்ரம்ப் விமர்​சனம்

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘நீ​தி​மன்​றங்​களின் இத்தகைய தீர்ப்​பு​கள் எனக்கு ஆச்​சரி​யம் அளிக்​க​வில்​லை. தீர்ப்பு வழங்​கிய நீதிப​தி​கள் இடது​சாரி சிந்​தனை கொண்​ட​வர்​கள். ஒரு வழி​யில் தடை ஏற்​பட்​டால், நாங்​கள் மாற்று வழி​யில் வரி வி​திப்பு முறையைச்​ செயல்​படுத்​து​வோம்​’’ என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here