அக்னி – 6 ஏவுகணை வரலாறு படைக்க தயார்: 10,000+ கி.மீ. வரை கண்டம் விட்டு கண்டம் பாயும்

0
22

பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது.

இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ தலை​வர் சமீர் வி.​காமத் சமீபத்​தில் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில், பாஜக தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “அக்​னி-6 – வல்​லரசு பாதையை நோக்கி இந்​தியா முன்​னேறுகிறது. 10,000+ கிமீ தூரம் பாயும் திறன் மற்​றும் எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பத்​துடன், அக்​னி-6 வரலாறு படைக்​கத் தயா​ராக உள்​ளது.

இந்த ஏவு​கணை இந்​தி​யா​வின் பாது​காப்பை எதிரி​கள் ஊடுருவ முடி​யாத​தாக மாற்​றும். அத்​துடன் உலகின் மிக​வும் சக்​தி​வாய்ந்த நாடு​களின் வரிசை​யில் நம்மை நிலைநிறுத்​தும். வலிமை​யான இந்​தி​யா, பாது​காப்​பான இந்​தி​யா” என்று குறிப்​பிட்​டுள்​ளது. மேலும் பாஜக பதிவேற்​றிய ஒரு காணொலி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இது​வரை அமெரிக்​கா, ரஷ்​யா, சீனா, பிரான்​ஸ், பிரிட்​டன் ஆகிய 5 நாடு​கள் மட்​டுமே கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ஏவு​கணை சக்​தி​யைக் கொண்​டுள்​ளன.

இப்​போது, இந்​தியா அதே வரிசை​யில் தனது நிலையை வலுப்​படுத்​தப் போகிறது. அக்​னி-6 இந்​தி​யா​வின் அடுத்த தலை​முறை ஏவு​கணை​யாகும். நீண்ட தூரம் சென்று தாக்​கும் திறனுடன், இந்​தி​யா​வின் வலிமை பிராந்​திய அளவில் மட்​டுமல்​லாமல் உலகளா​விய ரீதி​யிலும் விரிவடையப் போகிறது. இங்​கு​தான் அடுத்த பெரிய மாற்​றம் நிகழ்​கிறது. ஒரு ஏவு​கணை, பல இலக்​கு​கள் – அதுவே எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பம்.

இது ஒரே நேரத்​தில் பல பணி​களைச் செய்​யக்​கூடியது. அமெரிக்​கா, ரஷ்யா மற்​றும் சீனா போன்ற நாடு​களிடம் மட்​டுமே இருந்த இந்த சக்​தி, இப்​போது இந்​தி​யா​வுக்​கும் கிடைத்​துள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.எம்​ஐஆர்வி தொழில்​நுட்​பம் என்​பது, ஒரே ஒரு ஏவு​கணை மூலம் வெவ்​வேறு இலக்​கு​களுக்​குப் பல அணு ஆயுதங்​களை அனுப்ப அனு​ம​திக்​கும் ஒரு நுட்​ப​மாகும். இது தாக்​குதல் திறனை அதி​கரிப்​பதுடன், எதிரி நாடு​களின் ஏவு​கணை எதிர்ப்​புத் தற்​காப்பு அமைப்​பு​களை முறியடிக்​கவும் உதவுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here