இனப்பெருக்க அதிகரிப்பால் 80 நீர்யானைகளை கொல்ல கொலம்பியா முடிவு – ‘வன்தாரா’வுக்கு அனுப்ப ஆனந்த் அம்பானி வேண்டுகோள்

0
17

கொலம்பியா அரசு 80 நீர்​யானை​களைக் கொல்ல முடிவு செய்​துள்​ளது. இவற்றை தடுத்து தன்​னிடம் ஒப்​படைக்க தொழில​திபர் ஆனந்த் அம்பானி வேண்டுகோள் விடுத்​துள்​ளார்.

கொலம்​பி​யா​வின் கோகைன் போதைப் பொருள் கடத்​தல் மன்​ன​னாக திகழ்ந்​தவர் பாப்லோ எஸ்​கோ​பார். இவருக்கு லத்​தீன் அமெரிக்​கா​வில் மிகப் பெரிய தனி​யார் உயி​ரியல் பூங்கா அமைக்க வேண்​டும் என்​பது ஆசை. இதற்​காக கடந்த 1980-ம் ஆண்​டு​களில் 3 பெண் நீர்​யானை​கள் மற்​றும் ஒரு ஆண் நீர்​யானை​ கொலம்​பி​யா​வுக்கு இறக்​குமதி செய்​தார். அவற்றை புயெர்டோ ட்ரியூன்ஃபோ பகு​தி​யில் உள்ள தனது பண்​ணை​யில் வளர்த்​தார்.

தற்​போது இவற்​றின் இனப்​பெருக்​கம் அதி​கரித்து 160 ஆக உயர்ந்​துள்​ளது. இது தற்​போது ஹேசிண்டா நாப்​போல்ஸ் உயி​ரியல் பூங்​கா​வாக மாற்​றப்​பட்டு சுற்​றுலா தலமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. நீர்​யானை​களின் இனப்​பெருக்​கம் உள்​ளூர் உயி​ரினங்​களுக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளன. இதனால், இவற்​றில் 80 நீர்​யானை​களைக் கொல்ல கொலம்​பியா அரசு திட்​ட​மிட்​டது.

இல்​லை​யென்​றால், 2030-ம் ஆண்​டுக்​குள் நீர்​யானை​கள் எண்​ணிக்கை 500-ஆக உயர்ந்​து​விடும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. 80 நீர்​யானை​களைக் கொல்​லும் முடிவு உலகம் முழு​வதும் உள்ள விலங்கு நல ஆர்​வலர்​களை வேதனையடைச் செய்​தது.

இது பற்றி தகவல் அறிந்த இந்​திய தொழில​திபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்​பானி, 80 நீர்​யானை​களை​யும் கொல்​லாமல், குஜ​ராத்​தில் உள்ள தனது வனவிலங்கு பூங்​கா​வான ‘வன்​தா​ரா’ கொண்டு வர அனு​மதி அளிக்க வேண்​டும் என கொலம்பியா அரசுக்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இங்கு 1,50,000-க்​கும் மேற்​பட்ட வனவிலங்​கு​கள் இயற்​கை​யான சூழலில் பாது​காக்​கப்​படு​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here